பக்கம்:தந்தை பெரியார்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 1961-ல். பின்னர் காமராசருடன் இணைந்தார்; அவரை யும் எதிர்த்து, இந்திரா காந்தி முகாமில் இரண்டறக் கலந்தார். எங்கும் எதிலும் வெற்றி பெறாமல் இளமை யில் வாழ்வையும் முடித்துக் கொண்டார் 1976-ல். மனைவியும், மகன்களில் இனியனும் இன்று இந்திரா காங்கிரஸ். பெரியாரின் நேர் வாரிசு, தொடர்பின்றிப் போனது! - k; - சுற்றுப் பயணம் தொடர்ந்தார் பெரியார் தஞ்சை திருச்சி மாவட்டங்களில், ஆறறிவு படைத்ததால் மனிதன் சிந்திக்கும் ஆற்றலுள்ளவனாயிருக்கிறான்; அதனால் விலங்கு களைவிட உயர்ந்தவன்-என்ற கருத்தைப் பெரியார் மறுத்து, விளக்கினார். மிருகங்கள் கூடச் சிந்திக்கின்றன. மனிதன் மற்றவர்களுக்கு உதவுவதால் பெரியவன் என்றால், அற்பமான தேனி.கூட மனிதனுக்குத் தேன் தருகிறதே; மாடு கடப் பால் தருகிறதே.ஆனால் மனிதன் எப்போது உயர்ந்த வன் என்றால், தனக்கென்றுசுயநலத்துடன் எதையும்செய்து கொள்ளாமல், பொது நலத்துக்கே எப்போதும் பாடுபடுவ தால் மதிக்கப்படுவான்-என்றார் பெரியார். அதே போல 32 தர்மங்கள் செய்ய வேண்டும்; அதற்காகத்தான் கடவுள் மனிதனுக்குச் செல்வத்தைத் தந்துள்ளார் என்ற பழங் கொள்கையையும் கண்டித்தார். ஒருவனிடம் செல்வத்தைத் தந்து, அவன் இடுகின்ற பிச்சையைப் பெறுவதற்கென்றே இன்னொருவனை ஏழையாக வைப்பவன் கடவுளாயிருக்க முடியாது-என, வள்ளுவரையும் மேற்கோள் காட்டினார் பெரியார், சுற்றுப் பயணத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டது பெரியாருக்கு. செயற்கைப் பல், நாவில் உரசிஉரசிப் புண் ணாக்கி விட்டது. 16:3-45 முதல் சென்னை பொது மருத்துவ மனையில் பத்து நாள் தங்கிச் சிகிச்சை பெற்றார். அங்கு நாக்கில் புற்று நோய் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை செய்யப்பட்டது. நாத்திகம் பேசி நாத்தழும்பேறியவர் என்று சொல்ல ஆத்திகர்க்கு வாய்ப் பில்லாது எல்லாமே குணமாகி விட்டது. முதலில் தமைய