பக்கம்:தந்தை பெரியார்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 னாரின் சித்த வைத்தியம் பலிக்கவில்லை. அதன் பிறகு செயற்கைப் பல் செட்டைப் பொருத்தாமலே ஈறுகளால் நன்கு மென்று தின்னப் பழகிக் கொண்டார் பெரியார். முறுக்கும், இறைச்சியும்கூட நொறுக்கப்பட்டன! மீண்டும் பொதுக்கூட்டங்களுக்குச் சென்றுவிட்டு, ஏற். காட்டில் ஏப்ரல் மாதம் பிற்பகுதியில் ஒய்வு எடுத்து வந்தார். அப்போது, சொந்த உபயோகத்திற்காகத், தமது சொந்த நிலத்தில் விளைந்த அரிசியைத் தாமும், தமையனார். ச.வி.கே.யும், மணியம்மையாரும் எடுத்துச் சென்றதற்காகப், பெருந்தன்மையும் காருண்யமும் மிக்க சர்க்காரால், தலைக்கு 75 ரூபாய் அபராதம் கட்ட நேரிட்டது. ஈரோட். டில் மூன்றாம் முறையாக நடைபெற்ற திராவிட மாணவர். பயிற்சி முகாமுக்கு வந்து, வகுப்புகள் நடத்திவிட்டு, மறுபடி யும் ஏற்காடு திரும்பினார் பெரியார். * இரண்டாம் உலகப் பெரும் போரில் நேசநாடுகள் இறுதியாக வெற்றி பெற்று விட்டன. இதைப் பாராட்டிப் பெரியார் 12-5-1945 அன்று குடிஅரசு’’ தலையங்கம் எழுதினார். இதற்குப்பின் ஜூலையில் நடைபெற்ற சிம்லா. மாநாட்டில், வைசிராய் வேவல் கழகத்தை அழைக்காவிடி னும், வகுப்புவாரி உரிமைக்கு ஒப்புதல் தந்தனர் என்பது குறித்துப் பெரியார் மகிழ்ச்சி தெரிவித்தார். இத்திங்களில்: மணியம்மையார், ஏ.பி. சனார்த்தனம் இவர்களுடன் ஆந்திர நெல்லூர்ப் பகுதியில் பிரச்சாரம் செய்து வந்தார். அடுத்த திங்கள் பெங்களுருக்கும் சென்றிருந்தார் பிரச்சாரத்திற்கு. போலி ஜஸ்டிஸ் கட்சியைத் துவக்க முயன்று தோல்வி புற்ற மாஜிப் பதவியாளர் சிலர், வேறொரு முனையிலிருந் தும் பெரியார் மீது பாணம் தொடுத்துப் பார்த்தனர்: இமிடேஷன் சுயமரியாதைச் சங்கம் என்று 14-7-1945 "குடிஅரசு' இதனை வர்ணித்தது. தாங்களே மெய்யான சுயமரியாதைச் சங்கம், என ஒன்றைப் பதிவு செய்திட முனைந்தனர். இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி. எறியப் பெரியார் தொண்டர்கள் 1945-ஆகஸ்ட் 2-ம் நாள்