பக்கம்:தந்தை பெரியார்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171 கரூரில் சுயமரியாதை இயக்க மாநாட்டைப் பெரியார் தலை மையில் நடத்தி, உண்மை இதுதான் என நாட்டினர்! - திராவிடர் கழக உறுப்பினர் பதியும், பணி விரைந்து முன்னேறி வந்தது. 1945 ஆகஸ்ட் 18-ஆம் நாள் வரையில். உறுப்பினர் எண்ணிக்கை 33,867; கட்டணத்தொகை ரு3367/-ஈரோட்டிலிருந்து பெரியார் ஜஸ்டிசைட்" என்ற ஆங்கில வார இதழ் துவக்கினார், 1-9-45 அன்று. பின்னர் . செப்டம்பர் 3-ஆம் நாள் கும்பகோணம் அரசினர் கல்லூரி யில் தமிழ் மொழி பற்றிக் கருத்தாழமிக்க ஆய்வுப் பேருரை நிகழ்த்தினார். 17-வது நீதிக்கட்சி மாநாடு திருச்சியில் நடை. பெற ஆயத்தமாயிற்று. - 1945.செப்டம்பர் 29-ஆம் நாள் திருச்சி புத்துார். மைதானத்தில் 17வது நீதிக்கட்சி மாநாடு பெரியார் தலை மையில் நடைபெற்றது. என். அர்ச்சுனன் திறந்து வைத் தார். தராசுக்கொடி (இங்குதான் கடைசி) மிராண்டா கஜேந்திரன் அம்மையாரால் ஏற்றி வைக்கப்பட்டது. தி.பொ. வேதாசலம் வரவேற்புக் குழுத் தலைவர். அடுத்த நாள் டி. சண்முகம் தலைமையில் 4-வது சு.ம. இயக்க மாநில மாநாடு. கே.கே. நீலமேகம் திறந்துவைக்கக், கனகம்மையார் இராமசாமி கொடியேற்றினார். அண்ணாதான் வரவேற்புக் குழுவின் தலைவர். அழகர்சாமியின் சிறப்புரையும், எம்.ஆர். ராதாவின் நாடகமும் மாநாட்டில் பாராட்டுப் பெற்றன. இந்த மாநாட்டை ஒட்டி நடைபெற்ற ஊர்வலம், திட்டமிட்ட பாதையில் செல்லாதவாறு தடை செய்து, அரசு சிறு மதியைக் காட்டிக் கொண்டது. தொண்டர்கள் உணர்ச்சி மயமாய்த் தடை மீறத் துடித்தனர். பெரியாரோ தமது" இயல்புக்கேற்ப, அரசு அனுமதிக்கும் வழியிலேயே செல் வோம் என்று அமைதிப்படுத்தினார். இதேபோல்தான் கடந்த ஜூலை 22-ஆம் நாள் புதுச்சேரியில் பாரதிதாச னால் துவக்கப்பட்ட திராவிடர் கழக விழாவுக்குப் பெரியார் சென்றபோது, அவர் உரை நிகழ்த்திய பின்னர், உள்ளூர்க் கயவர்கள் சிலர் கொடி மரத்தை வீழ்த்திக் கலவரம் செய் தனர். பெரியாரை ஒரு ரிக்ஷாவில் ஏற்றிப் பாதுகாப்பாசு.