பக்கம்:தந்தை பெரியார்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அன்பர் ராமலிங்கம் இல்லத்திற்குத் தோழர்கள் அனுப்பி னார்கள். தனியே அகப்பட்டுக் கொண்ட மு. கருணாநிதி நையப் புடைக்கப் பட்டார் அங்கு தொழிலாளர் மித் திரன்’ இதழ் நடத்தி வந்த காஞ்சி கல்யாண் சுந்தரம் தாக்கப்பட்டார். அப்போதும் பெரியார் அமைதி காத்து, அனைவரையும் ஆறுதல் பெறச் செய்து, அடுத்த நாள் வரை தங்கியிருந்து, பின்னர் ஈரோடு திரும்பினார். - திருச்சி மாநாட்டில் பாடலாம் என்று பெண்ணாகரம் நடேசன் ஒரு பாடல் இயற்றிக்கொண்டு வந்திருந்தார். இன்னும் என்ன செய்யப் போறிங்க? சட்ட சபையை எந்த முறையில் நடத்தப் போறிங்க? சொல்லுங்க நீங்க! என்ற அந்தப் பாடலின் சந்தம் பெரியாரைக் கவர்ந்ததால், தாமே மெட்டமைத்துப் பாடிப் பார்த்தார். நன்றாக வந்தது. உடனே மகிழ்ந்து போய், அதில் 10,000 பிரதிகள் அச்சி யற்றித் திருச்சி மாநாட்டில் விநியோகம் செய்தார்; பாட லும் பாராட்டுகளை ஏராளமாகப் பெற்றது! தராசுக்கொடி தென்னிந்திய நல உரிமைச் சங்கம் தந்த கொடி, அது புரட்சியின் சின்னமல்ல; மாற்ற வேண்டும்என்பதாக ஒரு கருத்து திருச்சியில் உதயமாயிற்று. பின்னர் பெரியார் கேட்டுக் கொண்ட வண்ணம், பலரும் டிசைன் அமைக்க முயன்றனர். குடிஅரசு உதவி ஆசிரியராக அப்போது ஈரோடு வந்திருந்த மு. கருணாநிதி, கருப்பு மையும், தன் விரலின் நுனியிலிருந்து எடுத்த இரத்தமும் கொண்டு, இப்போதுள்ள திராவிடர் கழகக் கொடிக்கு வடிவமைப்பு எழுதித் தந்தார். அதுதான் பின்னர் 27-4-1946-ல் பெரியாரால் அங்கீகாரம் பெற்றது. இனி திராவிடர் கழகத்துக்குப் பெரியார்தான் நிரந்தரத் தலைவர் எனத் திருச்சி மாநாடு தீர்மானம் இயற்றியது. திராவிட விடுதலைப் படை என்பதாக ஒரு தொண்டர் படை திராவிடர் கழகத்துக்குத் தேவை என்றும் ஒரு தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் ஈரோடு திரும்பி யதும், இதைப்பற்றி மேலும் சிந்தித்து, 1945.செப்டம்பர் 29-ஆம் நாள் "குடிஅரசு' இதழில், கருப்புச் சட்டைப் படை