பக்கம்:தந்தை பெரியார்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.3 அமைப்பு என்பதாக ஒர் அறிவிப்பு வெளியிட்டார். ஈ.வி.கே. சம்பத், எஸ். கருணானந்தம் ஆகிய இருவரும் இதன் தற்காலிக அமைப்பாளர்கள் என்று கூறும் இத்தகைய அறிவிப்பு, 22-12-1945 குடிஅரசு' இதழ் வரையில் தொடர்ந்து வெளியாயிற்று. கருப்புச் சட்டைப் படையின் முதல் தொண்டராக, மு. கருணாநிதி தம்மைப் பதிவுசெய்து கொண்டார் ஈரோட்டில். திருச்சி மாநாடு, தனிச் சுதந்திரத் திராவிட நாடு வேண்டும் என்றும்,தேர்தலைப் புறக்கணிப்பதாகவும் புரட்சி கரமான இரு முடிவுகளையும் மேற்கொண்டது. அடுத்தி திங்கள் 11-ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பெரியார்,தேர்தல்பகிஷ்காரம் ஏன் எ ன விளக்கினார். நமது இழிநிலையை விளக்கிட் எப்போதுமே கருப்புச் சட்டை அணியலாம்; பெண்டிரும் புடவை: இரவிக்கை அணியலாம்; கூட்டங்களில் இனி மாலைக்குப் பதில் கருப்புத் துணிகளையே போடலாம் என்ற கருத்துகளைப் பெரியார் கூறினார். இந்தியாவில் பிற இடங் களில் ராமதண்டு, அனுமான் சைன்யம், செஞ்சட்டை, நீலச் சட்டை, ஹிந்துஸ்தான் சேவாதள் ஆகியவை இருப்பது போல, இங்கும் கருப்புச் சட்டைப் படை இருக்கும்என்றார் பெரியார். உடல்நலங் குன்றியதால் பெரியார் நவம்பர் 20ஆம் நாள் முதல் டிசம்பர் 31 முடிய குற்றாலத்தில் தங்கியிருந் தார். இதற்கு ஒரு காரணம், கடந்த நவம்பர் முதல் நாள் என். எஸ். கிருஷ்ணன், எம். கே. தியாகராஜ பாகவதர் இருவருக்கும் 14 ஆண்டு கடின காவல் தண்டனை வழங்கப் பட்ட தீர்ப்பாகும். பெரியார் இதனால் மனங்குமைந்து போனார். நாடெங்கும் திராவிடர் கழகக் கூட்டங்களில் இவர்களிருவரையும் விடுதலை செய்ய வேண்டிக்கொள்ளும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. நடிப்பிசைப் புலவர் கே. ஆர். ராமசாமி, கிருஷ்ணன் நாடக சபா ஒன்று துவக்கி யிருந்தார். இதில் டி.வி. நாராயணசாமி, சிவாஜிகணேசன், ஆர்.எம். வீரப்பன், எஸ். எஸ். ராசேந்திரன் ஆகியோர்