பக்கம்:தந்தை பெரியார்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 நடித்து வந்தனர். இந்த நாடக சபா தினந்தோறும் கிருஷ்ணன்-பாகவதர் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையைக் காட்சியாகக் காட்டி வந்தது. பத்திரிகா தர்மத்தின் பாதுகாவலனான மவுண்ட்ரோடு மகா விஷ்ணு, இந்து’ பத்திரிகை, என். எஸ். கே. சம்பந்தமான செய்திகளையே வெளியிடுவதில்லை. இதனால் மனம் வருந்திய பெரியார், நமக்கு நிதி வசதியும், ஒரு தினசரிப் பத்திரிகையும் தேவை என 1946 சனவரி 5-ஆம் நாள் குடி அரசு' இதழில் குறிப்பிட்டிருந்தார். கழகப் பிரச்சாரம் செய்யும் தோழர்கள், கூட்டங்களுக்கு ஒத்துக் கொண்டு, போகாமல் தவறி விடும் ஒழுங்கீனத்தையும் பெரியார் கண்டித்திருந்தார். யுத்தப் பிரச்சாரத்திற்காகத் தரப்பட்ட விடுதலை’ நாளேடு திருப்பித்தரப்பட்டால், நடத்தலா மென விருப்பம் தெரிவித்தார். அதன்படி 1946 ஜூன் 6-ஆம் நாள் முதல் விடுதலை’ நாளேடு மீண்டும் தொடங்கப் பட்டது. - காங்கிரஸ் கட்சி தொடங்கிய 60-ஆம் ஆண்டு விழா 1946 சனவரியில் எங்கும் கொண்டாடப் பட்டது. இதை யொட்டி காந்தியார் சுற்றுப் பயணம் புறப்பட்டார். பெரியார், காங்கிரஸ் அய்ந்தாம்படை ஸ்தாபனந்தான் என்றாலும் காந்தியார் பகிஷ்காரம் இப்போது வேண்டாம்; காங்கிரசே தேர்தலில்வெற்றிபெறும் என்பதாக எழுதினார். இந்த முற்போக்கான காலத்திலும் சேலத்தில் மார்ச் 9, 10 தேதிகளில் சர் சி.பி. ராமசாமி அய்யர் தலைமையில் பிராமணர் மகாநாடு நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டு பதைத்தார் பெரியார் திராவிட மாணவர் கழகத்தின் இரண்டாவது மாகாண மாநாடு நீடாமங்கலத்தில் பிப்ரவரி 23, 24 நாட்களில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. பெரியார், அண்ணா, ஏ. ராமசாமிக் கவுண்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவர் உள்ளத்தில் மூண்டிருந்த புரட்சிக்கனல் அணைந்திடாமல் பாதுகாத்தார் பெரியார் நாடெங்கும் கருப்புச் சட்டை அணிந்தோர் உலா வந்தனர். மதுரையில் கருப்புச் சட்டைப் படையின்