பக்கம்:தந்தை பெரியார்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 என்பதும் புரிவதில்லை; திராவிடர் தவிர மற்ற எல்லாருமே நமக்கு அந்நியரே, காங்கிரஸ் ஏற்பட்டது, முஸ்லீம்களிட மிருந்து இந்துக்களைப் பாதுகாக்கவே; எனவே ஆரியம் ஒழிந்த திராவிடமே நமது இலட்சியம்-என்று பெரியார் சென்னையிலும் பிற ஊர்களிலும் நடந்த பொதுக் கூட்டங் களில் விளக்கினார். இந்நிலையில், இந்தியாவில் நடை பெற்ற அரசியல் நிர்ணயசபைத் தேர்தலில், காங்கிரஸ், போட்டியிட்டு, நூறு சதவீத வெற்றியைத் தேடிக் கொண்டது! வெள்ளையர் வெளியேறுமுன்.ே காங்கிரசார் இங்கு பதவியில் அமர்ந்து, அரசியல் சட்டங்களை இயற்றத் தொடங்கினர். முஸ்லிம் லீகும், டாக்டர் அம்பேத்கார் இயக்கமும் நேரடி நடவடிக்கையில் இறங்கின. சர் ஸ்டா போர்டு கிரிப்சும், வைசிராய் வேவலும் திராவிடர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்தும், காலை வாவிவிட்டனர். பெரியாருக்கு அதிர்ச்சி தரும் வண்ணம், 24 வயது நிரம்பு முன்னர் என். அர்ச்சுனன் மறைந்துவிட்டார் 12 10-40 அன்று. P காங்கிரஸ் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனல் திட்டவட்டமான கொள்கையில்லாமல் குழம்பிக் கிடந்தனர் மந்திரிகள். மதுவிலக்கிள் கட்டுப்பா டில்லாக் காங்கிரஸ் மந்திரிகள் என்று பெரியார் கண் டனம் தெரிவித்து எழுதினார். மேலும், முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்ற தலைப்பிலும் எழுதினார். அதாவது, காங்கிரஸ் இடைக்கால சர்க்கார் அமைத்ததைச் சுட்டிக்காட்டி , முன்பு நீதிக்கட்சி ஆட்சி முடிவுற்றுக், காங்கிரஸ், ஆட்சி அமைக்கத் தயங்கியபோது, 1936-ல், அற்பாயுள் மந்திரிசபையென இடைக்கால மந்திரி சபையைக் காங்கிரசார் வர்ணித்தார்களல்லவா-அதைப் பெரியார் நினைவூட்டினார். ', சென்னையில் டிப்புசுல்தான் நாள் என்பதாக 19.1, நவம்பர் 16ஆம் நாள் கொண்டாடப்பட்ட ஒரு விழாவில் பெரியார் கலந்து கொண்டு உரையாற்றியிருப்பது புதுமை யாகத் தோன்றுகிறது.