பக்கம்:தந்தை பெரியார்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

179 சென்னை மாகாணத்தில் பிரகாசம் தலைமையில் காங் கிரஸ் அரசோச்சத் தொடங்கியிருந்தது. ஈரோட்டில் சண்முக வேலாயுதம், புலியூர் குகநாதன் இருவரும் சேர்ந்து நாதன் கம்பெனி என்ற புத்தக விற்பனை நிலையம் துவங்கினர். குடிஅரசு' இதழ் சில காலம் இவர்கள் பொறுப்பில் நடைபெறப் பெரியார் அனுமதித் திருந்தார். பெரியாரின் சேலம் கல்லூரிச் சொற் பொழிவைத் தொகுத்து தத்துவ விளக்கம்” என்ற அழகிய நூலையும் இவர்கள் வெளியிட்டனர் பின்பு, 1947 சனவரி 22 அன்று துவக்க விழா ஆற்றிய பெரியார், நூல்களைப் பற்றி அரிய கருத்துகளை அங்கு வெளியிட்டார்:-இப்போது நூல் படிப்பவர் தொகை அதிகமாகியிருப்பதால், வெளியீட் டாளர் நூல் விற்குமோ என அஞ்சவேண்டியதில்லை. ஆனால் படித்த கூட்டத்தார், பிறருக்கு உபகாரிகளாக இருப்பதில்லை. பண்டிதர்கள் எவ்வளவோ பெரிய நூல் களை எழுதி வெளியிட்டாலும் மூடநம்பிக்கையில்லாத, மாணமற்ற தன்மையில்லாத, நூல் ஒன்றேனும் காண முடிவ தில்லை. அறிவியக்க நூல்களை வாங்குவோர் மிக அவசிய மானவற்றை வைத்துக் கொண்டு, மற்ற நூல்களைக் குறைந்த விலைக்கு, உடனே, பிறர்க்கு விற்று, நிறையப் பேர் படிக்க வழி செய்ய வேண்டும்-என்றெல்லாம் பெரியார் சிந்தனைச் செல்வத்தை வாரி வழங்கினார். மார்ச் 18-ஆம் நாள் திருச்சியில் தென்பகுதி ரயில்வே அலுவலர் சங்கத்தார் பெரியாருக்கு 1080 ரூபாய் நிதி வழங்கினார்கள். அவர்கள் குறை போகப், பெரியார் காட்டிய வழிகள், ஆழ்ந்த சிந்தனைக்கு உரியவையாகும், அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கும் ரயில்வே சர்வீஸ் கமிஷன் உறுப்பினர்கள் அய்ந்து பேரில் ஒருவர் முஸ்லிம்; அவரும் பார்ப்பன மாதை (கே. சந்தானம் அய்யங்காரின் மைத் துனியை) மணந்தவர்; மற்றவர் பார்ப்பனர். நீதி எப்படி நம்மவர்க்குக் கிடைக்கும்? காங்கிரசின் ராமராஜ்யம் நமது சூத்திரர்களுக்கு மட்டுமே திங்கிழ்ைக்கிறது. முஸ்லீமோ, வெள்ளையரோ, சட்டைக்காரரோ, மதம் மாறுவதாய்.