பக்கம்:தந்தை பெரியார்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 மிரட்டும் அம்பேத்காரின் தாழ்த்தப்பட்டவரோ தமக்குரிய கோட்டாவைப் பெறுகிறார்கள். இந்து என்கிற பெயரில் பார்ப்பனர் முழுக் கோட்டாவும் அடித்து விடுகின்றனர். தப்பித்தவறி நம்மவர் யாராவது மேலே வந்தால், கெட்ட பெயர் உண்டாக்கி, ஆளையே அழித்துவிடுகிறார்கள். அதனால்தான் நாம் இந்து என்னும் பிடிப்பிலிருந்து விடுபட வேண்டும். நமக்கு அய்ந்தாண்டுகளுக்குப் பின் தாம் இந்து. வல்ல என்று சொன்ன அம்பேத்காருக்குச் சலுகை கிடைக் கிறது; நாம் திராவிட நாடு கேட்ட மூன்றாண்டுகட்கு. அப்பால் பாக்கிஸ்தான் கேட்ட ஜின்னாவுக்குப் பயப்படு கிறார்கள்; நம்மை மாத்திரம் மதிப்பதில்லை. ஆகையால் நமக்கு இருக்கிற இழிவு ஒழிய நாமெல்லாம் இஸ்லாம் மார்க்கத்தில் சேர்ந்து விடுவதுதான் ஒரேவழி-என்றார் பெரியார். x பிரகாசம் தலைமையில் அமைந்திருந்த காங்கிரஸ் ஆட்சி சென்னை மாகாணத்தில் கொடுங்கோலாட்சி புரிந்து வந்தது. ஆந்திராவைத் தனியே பிரித்துக் கொண்டு போய் விட எண்ணிய பிரகாசத்தின் கனவு அப்போது கைகூடாத தால் அவர் எரிச்சலுற்றுக் கிடந்தார். காமராசர் தமிழ் நாடு காங்கிரசின் தலைவராக ஆற்றலுடன் விளங்கியதால் பிரகாசம் தலைமையை மாற்றக் காமராசர் கண் விழிப் பாரா என்று பெரியார் எழுதினார். சி. என். முத்துரங்க முதலியாரும், டாக்டர் பி. சுப்பராயனும் போட்டியிட்டு, இரு முறையும் பிரகாசமே வென்றார். அதனால் காமராசர் புது யுக்தியைக் கையாண்டு, தெலுங்கு பேசும் தமிழரான ஒமந்துர் பி. ராமசாமி ரெட்டியாரை மார்ச் மாதம் முதல்வராக்கினார். பிரகாசம் எதிர் வரிசையில் அமர்ந்து, தொல்லை கொடுப்பதைத் தொடர்ந்தார்! பிரகாசம், பந்துலு (அய்யர்) ஆயிற்றே! என்றார் பெரியார். பெரியாருக்கு இப்போது மகிழ்ச்சியளித்த ஒரே செய்தி என். எஸ். கிருஷ்ணன், தியாகராச பாகவதர் இருவரும் 25.4.47ல் விடுதலை ஆனதுதான்! அதனால் நோயுற்றிருந்த அவர் பூரித்தெழுந்தார். எடை ஒரு வேளை அதிகரித்