பக்கம்:தந்தை பெரியார்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

181 ததோ என்னவோ? திருவத்திபுரத்தின் கழகத் தோழர்கள், அடுத்த திங்கள், பெரியாருக்குத் துலா நிறை புகு விழா நடத்திக் களித்தனர். . - 1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவில் வெள்ளையன் வெளியேறி னான். காந்தியார் கேட்ட இந்துஸ்தான் சுயராஜ்யம் முழு அளவில் கிடைக்கவில்லை. இந்தியாவைக் கூறு போட்டுப், பாக்கிஸ்தானைத் தனியாக்கிக், குடியேற்ற நாட்டு அந்தஸ் துடன்தான் சுயராஜ்யம் தந்தான். ஆடி, ஆனந்தப் பள்ளுப் பாடினர் காங்கிரசார். இது நமக்குத் துக்க நாள்! வெள்ளையன் வெளியேறினானாலும், வட நாட்டுக் கொள்ளையன் நம்மீது சவாரி செய்கிறானே?’ என்றார் பெரியார். திராவிடர் கழகத் தேனிசையில் அபசுரம் ஒலித்தது. அண்ணா எழுதினார்- இரண்டு பேர் நம்மீது சவாரி செய்தனர்; ஒருவன் ஒழிந்ததில் பாதிச்சுமை குறைந்த தல்லவா? அதனால் ஆகஸ்ட் 15 மகிழ்ச்சிக்குரிய நாள்!" என்று. வெளியில் தெரியுமளவுக்குக், கழகம் இரு முகா மாகித், தாக்கிக் கொண்டது. ஏற்கனவே, எல்லாரும் எப்போதும் கருப்புச் சட்டை அணிய வேண்டும்; வெள்ளைச் சட்டையணியும் குள்ள நரிகள் எனக்கு வேண்டாம்-என்று பெரியார் சொன்னதில், அண்ணாவும் வேறு சிலரும் மனத் தாங்கலுடனிருந்தனர். ஆகஸ்ட் 15 புதிய விரிசலை உண்டாக்கியது. . - செப்டம்பர் 14ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற திராவிட நாடு பிரிவினை மாநாட்டில், திரு. வி. க. கலந்து கொண்டு திராவிட நாடு திராவிடருக்கே என்று முழங்கிய அற்புத மாறுதலைத் தமிழகம் கண்டது ஆயினும், அண்ணாவின் உள்ளம் அமைதியை இழந்திருந்தது. பெரியார் செயல்களில் அண்ணா ஏதோ குறை உணரத் தொடங் கினார். இதற்கு மேலும் உரமூட்டுவது போல், கரூர் வழக்கு நிதி அமைந்தது. நெசவாளர் போராட்டத்தில் ஈடுபட்ட கரூர் கழகத் தோழர்கள் சுமார் 100 பேர்மீது காங்கிரஸ் அரசு கடுமையான விதிகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து அலைக் கழித்தது. பெரியார், அவர்களை ஆதரித்துக் காப்பாற்ற