பக்கம்:தந்தை பெரியார்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 கிணங்க, சென்னையிலிருந்த ஒமந்துாரார் அரசு, திராவிடர் கழகத்தின்மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டது. கிரிமினல் சட்டத் திருத்தம் 15-ஆவது பிரிவின்கீழ்க் கருப்புச் சட்டைப் படைக்குத் தடை விதிக்கப்பட்டது. கழக அலுவல கங்கள், பத்திரிகை அலுவலகங்கள், கழகத்தார் இல்லங்கள் யாவும் சோதனைக்குள்ளாயின. கருப்புச் சட்டைப்படை என்பதாக ஒரு படை இல்லை என்று எடுத்துக் காட்டியும் கேட்பாரில்லை. ஆகையால் பெரியார் இன்னும் விளக்க மாக-என்னை அழிக்க நினைத்தால் அது என் இயக்க அழி வல்ல; பிராமன அழிவேயாகும்-என்று 27-3-48 குடிஅரசு’ இதழில் எழுதி இடித்துரைத்தார். இனிப் பிராம்னாள் என வழங்காமல், இலக்கிய ஆதாரத்தின்படிப், பார்ப்பான் என்றே அழைத்திட ஆணையிட்டார். திராவிடர் கழகம், என்றும் பலாத்காரத்தையோ வன்செயல்களையோ ஆதரிக்காது; ஊரெங்கும் தாக்கப்பட்டும், அடிக்கப் பட்டும் அவதிக்கு ஆளாவதெல்லாம் கழகத்துக்காரரே ! வன்செயலை விரும்பாத அகிம்சாவாதியான் காந்தியடி களையே இந்து மதவெறிப் பார்ப்பனன் சுட்டுக் கொன்றது போல, அறவழியில் செல்லும் கழகத்துடன் மோத வேண் டாம்-என எச்சரித்தார் பெரியார். சுயநலமிகளுக்கு மட்டுந்தான் எங்கள் கழகம் விரோதி. மற்ற அனைவர்க்கும் தோழன்-எனவும் விவரித்தார். ஜாதி மதமற்ற-வர்ணா சிரம அடிப்படை ஒழிந்த-சமுதாயம் அமைத்திட இனி. யாவது பாடுபட்டு ஆவன செய்யுங்கள் என அரசியல் நிர்ணய் சபைக்கும், காங்கிரசுக்கும் 1948 ஏப்ரல் 24ஆம் நாள் பெரியார் ஆலோசனை வழங்கினார். 17-4-48-ல் சென்னையில் மறைமலையடிகள் தலைமை யில் நடந்த இந்தி எதிர்ப்பாளர் மாநாடு ஒன்றில் பெரியார் கலந்து கொண்டார். அண்ணாவும், திராவிடர் கழகத்தவர் அல்லாத திரு. வி.க., அருணகிரி அடிகள், ம. பொ. சிவ ஞானம், டி. செங்கல்வராயன், நாரண துரைக்கண்ணன் ஆகியோரும் கட்டாய இந்தியை எதிர்த்துப் பேசினர்: