பக்கம்:தந்தை பெரியார்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏதாவது அபிப்பிராய பேதம் உண்டா? என வெளிப்படையாகவும்,நேரிடையாகவும் தம்மிடம் வினவிய கழகத் தோழர்களிடம் பெரியார்-இம் மாதிரிக் கேட்பதே தவறு. ஒரு கட்சிக்கு ஒரு தலைவர்தான் இருக்க முடியும். மற்றவர், பின்பற்றுவோராகத்தான் இருக்க வேண்டும். அபிப்பிராய பேதம் சொந்தத் தனிப் பட்ட விஷயங்களில் வேண்டுமானால் இருக்கலாம்; கழக விஷயங்களில் இருக்கக்கூடாது! அப்படி ஏதாவது இருப்ப தாக வெளிப்படுத்தினால், அது குறுக்கு வழியில் தமக்கு விளம்பரம் தேடும் முறையாகவே கருதப்படும்...என்று திட்ட வட்டமாகவே அறிவித்து விட்டார். இந்நிலையில் கதிராவிட நாடு' இதழில் அண்ணா எழுதிவந்த-லேபில் வேண்டாம், உள்ளம் உடையுமுன், ராஜபார்ட் ரங்கதுரை, மரத்துண்டு, இரும்பாரம் போன்ற உருவகக் கதைகள்,ஏதோ புயலுக்கு முன்னெச்சரிக்கை போலக் காட்சி தந்தன. அநேகர் எதிர்பார்த்தவாறு அறிஞர் அண்ணா துாத்துக்குடி மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை! -. அனைத்துலகத் தொழிலாளர் நாளாகிய மே தினத். தைத், தொழிலாளர்களின் உண்மையான இயக்கமாகிய திராவிடர் கழகம் ஏன் கொண்டாடுகிறது என்பதை விளக் வினார் பெரியார். 1-5-48 குடி அரசு’ இதழில் மே தினமும் திராவிடர் கழகமும் என்று தலையங்கம் தீட்டி னார். மே திங்கள் 8, 9 நாட்களில் தூத்துக்குடியில் 18-வது திராவிடர் கழக மாகாண மாநாடு நடைபெற்றது. பெரியார் தலைமையேற்று, காந்தியடிகள் படத்தையும் திறந்து வைத்தார்; தி. பொ. வேதாசலம் திறப்பாளர்; கே.கே. நீலமேகம் கருப்பு சிவப்புக் கொடியினை உயர்த் தினார். திராவிடநாடு படத்தை அண்ணா திறக்க வேண்டும்; வரவில்லை! பன்னீர் செல்வம் படத்தை அழகிரி யும், தாளமுத்து நடராசன் படத்தை ஏ.பி. சனார்த்தனமும், வ.உ.சி. படத்தைத் திரு.வி.க.வும் திறந்து வைத்தனர். கழகத்தில் கட்டுப்பாடு காக்கப்படவேண்டிய அவசியம்