பக்கம்:தந்தை பெரியார்.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 இந்தி தமிழ் நாட்டில் விருப்பப்பாடமாகவும், கேரள ஆந்திரக் கர்நாடகப் பிரதேசங்களில் கட்டாயப் பாடமாக வும் இருக்குமென்று, G. O. 1643.பிரகாரம், 20-6-48 அன்று. ஒர் அர்சாணை வெளியாயிற்று. பெரியார் இராமசாமிக்கு ஒமந்துார் இராமசாமி பயப்படலாமா என்று தமிழகத்துப் பார்ப்பன் ஏடுகள் சிண்டு முடிந்து விட்டதில், தமிழ் நாட்டி லும் கட்டாயமாக்கினர். உண்மையில் கட்டாயப் பாடந்: தான்; ஆனால் சொல்லிக் கொண்டதோ விருப்பப் பாடம் என்று. இதிலடங்கிய சூது, சூட்சுமத்தைப் பெரியார் உணர்ந்து கொண்டதால், 10-8-48 முதல் இரண்டாம் இந்திப் போரைப் பெரியார் துவக்கினார். - இந்த இரண்டாம் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி துவக்கப் படுமுன்னர் நிகழ்ந்தவற்றைப் பெரியாரே வர்ணிக்கிறார்::கிளர்ச்சி துவக்கமானது மாபெரும் அஸ்திவாரத்தின்மீதே துவக்கப் பட்டது. 1948-ஆம் ஆண்டு ஆகஸ்டு 14-ம் நாள் இந்தி எதிர்ப்பு மாநாடானது சென்னை செயிண்ட் மேரிஸ் ஹாலில் மறைமலையடிகள் தலைமையில், தெருக்கள் எல்லாம் அடைபடும்படி, 25,000 மக்கள் முன்னிலையில், அந்த ஹாலும் அந்தத் தெருவும் அதுவரை கண்டிராதபடி' மகா உற்சாகத்துடன் கூடியது. , , அதில் மறைமலையடிகள், தமிழ்ப்பெரியார் திரு.வி.க. அவர்கள் முதல், தோழர்கள் க்தர் பிரதிநிதி நாரண துரைக் கண்ணனார், காங்கிரஸ் பிரதிநிதி ம.பொ.சி., கிறிஸ்தவப் பிரதிநிதி ரெவரெண்ட் அருள் தங்கையா, முஸ்லிம் லீக் பிரதிநிதி அப்துல் மஜீத், டாக்டர் ஏ. கிருஷ்ணசாமி, வி. வி. ராமசாமி, மாஜிமேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை, கே.ஏ.பி. விஸ்வநாதன் முதலிய திராவிடர் கழகத்தினரல்லாதவர் களும், அதன் எதிரிகளும் ஏராளமாக வந்திருந்தனர். இம். மாநாடு தவிர மற்றும் பல மாநாடுகள்-புலவர் மாநாடு, மாணவர் மாநாடு, பெண்கள் மாநாடு முதலிய பல மாநாடுகள் கூடி இந்தியை எதிர்த்துத் தீர்மானங்கள் செய்ததோடு நேரடிக் கிளர்ச்சியில் கலந்து கொள்ள ஏராளி. மான மக்கள் முன்வந்தார்க்ள். . ,, " ::: نہ ...': '.. ؟