பக்கம்:தந்தை பெரியார்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 அந்த மாநாட்டுத் தலைவரை ஆதரித்து நான் காலை கபில் பேசுகையில், தமிழைவிட ஆங்கிலத்தைக்கட்டாய பாட மாக்கினால் அதற்கு ஒட்டுக் கொடுப்பேன் என்று கூறினேன். சிலர் அதைப் பற்றித் தவறாகவும் எண்ணியிருப்பார்கள். குறிப்பாக ம.பொ. சிவஞானம் அவர்கள், பெரியார் மந்திரி :யானால் அவ்விதம் செய்ய மாட்டார். ஏதோ பேச்சுக்கு அவ்வாறு கூறினார் என்று தனது அதிருப்தியைக் காட் டினார்.இன்றும் கூறுகிறேன், நாம் ஆங்கிலத்தை வெறுக்கும் புத்தியை வளர்ப்போமானால் என்றுமே விடுதலை அடைய ...முடியாத அடிமைகளாகவேதான் இருப்போம். நான் இரண்டாம் இந்தி எதிர்ப்புக்குத் தேதி குறிப் :பிட்டவுடன் 2 நாட்களுக்கு முந்தி தோழர் ஒமந்துரர் ராம சாமி ரெட்டியார், முதல் மந்திரி அவர்கள், என்னை நேரில் அழைத்தார். நான் சென்றதும் என்னை அன்பாய் வர வேற்று, துவக்க வாக்கியமாகக் கலக்கத்துடன், 'நீங்கள் இருக்க வேண்டிய இடத்தில் நான் இருக்கிறேன்' என்றார். 'இந்த இடத்தில் நான் இருக்க நினைத்தால் இந்த இடம் எனக்கும். கிடைக்காது. உங்களுக்கும் கிடைத்திருக்காது’ என்றேன். என்ன இருந்தாலும் நீங்கள் காங்கிரசை விட்டுப் போனது தவறு என்றார். - நான் காங்கிரசில் இருந்திருந்தால், இன்று நீங்கள் செய்கிற அளவு காரியம் கூட நான்செய்ய எனக்கு வாய்ப்புக் கிடைத்திருக்காது’ என்றேன். கல்வி மந்திரி அவிநாசிலிங்கம் செட்டியார், இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என்று அரசாங்கப் பத்திரிகையில் எழுதியதைக் காட்டினேன். என்ன இந்தச் செட்டியாரின் தொல்லை பெரிய வம்பாக இருக்கிறதே என்று சொன்ன பிறகு சில வார்த் தைகள் பேசிய பின், என்ன இப்படிக் கிளர்ச்சி ஆரம்பித்து எனக்கு நீங்கள் வேறு தொல்லை கொடுக்கப் போகிறீர்களே! அய்தராபாத் பிரச்சினைப் போராட்டம் துவக்கப்பட்டால் என்ன செய்வது? என்றார். -