பக்கம்:தந்தை பெரியார்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 முத்து நடராசன் படத்தை ஏ.வி.பி. ஆசைத்தம்பியும், பன்னீர் செல்வம் படத்தை ஏ. சித்தையனும், சுந்தரனார் படத்தை இரா. நெடுஞ்செழியனும், என் . அர்ச்சுனன் படத்தை சி.டி.டி. அரசுவும் திறந்துவைத்தனர்.(உண்மையில் மாநாட்டில் ஒரு படமும் வைக்கப்படவில்லை. கற்பனையாய்க் காணவேண்டும் என்று பெரியார் கூறிவிட்டார். எப்படி சிக்கனம்?) முதல் நாள் இரவில் கே. கே. நீலமேகம் தலைமையில் எம்.ஆர். ராதா நடித்த மகாத்மா தொண்டன் நாடகம். மறுநாள் இரவில் குஞ்சிதம் குருசாமி தலைமை யில் மு. கருணாநிதி நடித்த தூக்குமேடை நாடகம். டி.கே. சீனிவாசன் நன்றி நவின்றார், - ரேஷன் முறை தீவிரமாக அமுலில் இருந்ததால், மாநாட்டுக் கட்டணத்துடன் உணவுக்கும் சேர்த்து வசூலித்து விட்டனர். பெரியார் எதிர்பார்த்ததை விடப் பன்மடங்கு கூட்டம் பெருகி வழிந்ததால், நேரத்தில் உண வளிக்க முடியவில்லை. தோழர்கள் பெரியார் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு, வயிற்று உணவை மறந்து, செவி உணவை அருந்தினர் ஈரோடு நகரமன்றம் அண்ணா, திரு. வி.க. இருவர்க்கும் வரவேற்பளித்துச் சிறப்பித்தது. மீண்டும் அடுத்த திங்களே இந்தி எதிர்ப்பு அறப்போர் தொடங்கி விட்டது, நவம்பர் 2-ஆம் நாள். கும்பகோணத்தில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டதால், அதை மீற வேண்டிய நிர்ப்பந்தம் நேரிட்டது, தினமும் தோழர்கள் மறியல் செய்தனர். பெரியார் தாமே களத்தில் இறங்கிட முடிவு செய்தார். 1948 டிசம்பர் 18-ஆம் நாள் குடந்தையில் பெரியார் மறியல் செய்து கைதானார். நள்ளிரவு 2-15 மணிக்கு கும்பகோணத்தில் கைதான பெரியாரை, வேனில் ஏற்றி, முதலில் திருச்சிக்குக் கொண்டு சென்று, மீண்டும் தஞ்சை வந்து,பின்னர் அய்யம்பேட்டை ரயில் நிலையத்தில் இறக்கி, சென்னை செல்லும் ரயிலில் ஏற்றி அலைக்கழித்தனர். அத்துடன் பத்தாம் முறையாகப் பெரியார் கைதானபோதுஅடக்கு முறை எங்கே.நடந்தாலும், எப்படி இருந்தாலும்,