பக்கம்:தந்தை பெரியார்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 அதை முகங்கொடுத்துச் சமாளிக்க வேண்டும். அப்போது தான் நமது மானம் காப்பாற்றப்படும். சமாதான்த்துக்குப் பங்கமோ, ஒழுங்குத் தவறோ ஏற்படக் கூடாது'-என்று கண்டிப்பான கட்டளை பிறப்பித்தார் பெரியார். ஆனால், ஓமந்துாரார் ஆட்சி மறுநாளே வெறியாட்டந்: தொடங்கியது. தடியடியால் குடந்தையில் இரத்த ஆறு ஒடிற்று. போலீஸ் அதிகாரியின் கோர தாண்டவத்தை எடுத்துக் காட்டிடப் போர்த்தளபதி அண்ணா, 'ஆதித்தன் கனவு’ என்று திராவிட நாடு’ இதழில் தீட்டினார். பின்னர் டிசம்பர் 26-ஆம் நாள் முதல் அரசின் போக்கில் அமைதி: காணப்பட்டது. தடியடியும் கைதும் நிறுத்தப்பட்டன. எனவே 28-ஆம் நாள் திராவிடர் கழகப் போராட்டக் குழு கூடி, அறப்போரை நிறுத்துவதென முடிவெடுத்தது. 59 நாள் அறப்போர் நடைபெற்றது, இந்த இரண்டாம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்! --