பக்கம்:தந்தை பெரியார்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 குறளை ஏந்த வேண்டும். ஆரியப் பிடிப்பிலிருந்து விடுபட வேண்டும்-என்ற, தமது இனவுணர்வின் அடிப்படையில் எழுந்த வேட்கைக்குப், பெரியார் 1949 பொங்கல் திருநாள் வாரத்தில் நல்லதொரு விருந்து கண்டார். சென்னையில், சனவரி 15, 16 நாட்களில், வள்ளுவர் குறள் மாநாடு, பெரியார் நடத்தினார். தெ. பொ. மீனட்சி சுந்தரனார், ச. சோமசுந்தர பாரதியார், திரு. வி. க., ஏ. சக்கரவர்த்தி நயினார் போன்ற தமிழறிஞர்கள் பங்கேற்றுப், பாமரர் கையில் குறளை ஒப்படைக்கச் செய்தார் பெரியார். குடி செய்வார்க்கில்லை பருவம்; மடி செய்து, மானம் கருதக் கெடும்-என்ற குறள் பெரியாருக்கு மிகமிகப் பிடித்தமான தாகும். மார்ச் 12-ஆம் நாள் திருச்சிராப்பள்ளி நகராட்சி மன்றமும், மே 24-ஆம் நாள் திருவரங்கம் நகர்மன்றமும் பெரியாருக்கு வரவேற்பளித்துப் பெருமை ஈட்டின. - பட்டுக்கோட்டை கே. வி.அழகர்சாமி 30 ஆண்டுகட்கு மேலாகத் தமிழ் மக்கள் மேன்மைக்குப் பொதுத் தொண் டாற்றி, மேடைதொறும் கதறிப், பணஞ்சேர்க்கத் தெரி யாமலும், கிடைத்ததை ஒழுங்குடன் செலவு செய்யத் தெரி யாமலும், உடல் மெலிந்து நலிந்து, 1949 மார்ச் 28-ஆம் நாள் தஞ்சையில் உயிர் நீத்தார். பெரியார் பெருந்துன்ப முற்றார். கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனைக் கொண்டு தஞ்சையில் மே 29-ஆம் நாள் அழகிரி குடும்ப உதவிக்காக 6000 ரூபாய் நிதி வழங்கச் செய்தார். ஒவ்வோராண்டும் மார்ச் 28-ஆம் நாளை அழகிரி நினைவு நாளாகக் கொண் டாடுமாறும் கழகத் தோழர்களைக் கேட்டுக் கொண்டார். 1948-ல் ராஜாஜி க்வர்னர் ஜெனரலாகச் சென்னை வந்தபோது, கருப்புக் கொடி பிடிக்கத் திட்டமிட்ட பெரி யார்; 1949 மே 14ஆம் நாள் ராஜர்ஜி திருவண்ணாமலை ரமணாசிரமத்தில் பாதாளலிங்கக் குகை திறப்பு விழாவுக்கு வந்தபோது, அங்கே சென்று, ராஜாஜி தங்கியிருந்த ரயில் சலூனில், காலை 6.46 முதல் 7-17 வரை சந்தித்துப் பேசி னார். பின்னால் விளைந்த சில நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, பெரியார், அவரிடம் ஆலோசனை பெற்றதாக