பக்கம்:தந்தை பெரியார்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

195 ஒர் எண்ணம் கழகத் தோழர்களிடம் நிலவிற்று. அது உண்மையன்று. -- ஒமந்துTர் ரெட்டியாரைப் பெரியார் பாராட்டுகிறார் என்று ராஜாஜியிடம் கோள் மூட்டிய காங்கிரஸ்காரரிடம், "அதுதான் நல்லது அவர் ஒருவரையாவது நாயக்கர் பாராட்டுகிறாரே! அவருக்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்-என்று அறிவுரை கூறினார். ஆயினும் அது எடுபடாமல், போட்டி ஏற்பட்டு, ஓமந்துாரார் விலகிட, குமாரசாமி ராஜா சென்னை மாகாண முதல் மந்திரியாகப் பொறுப்பேற்றார். மூன்றாண்டுகளுக்கு இவரே நீடித்தார். எப்படியும் ஒரு பார்ப்பனர் வரமுடியவில்லை என்பதால் பெரியார் மகிழ்வு பூண்டார். > நம் நாட்டிலுள்ள பார்ப்பனர்களாகிய ஆரியர்கள் ஜெர்மானியநாட்டு யூதர்களைப்போல்தான் இருக்கிறார்கள். அங்கே ஜெர்மனியிலிருந்து யூதர்களை விரட்டியடிக்க என்னென்ன காரணங்கள் கூறப்படுகின்றனவோ அதே காரணங்கள் இங்குள்ள ஆரியர்களுக்கு நாம் கூறமுடியும். இந்த நாட்டில் உள்ள ஆங்கிலோ, இந்தியர்களைப்போல், நம்மையே கேவலமாக எண்ணிக்கொண்டு, இவர்கள் இங்கே வாழ்கிறார்கள். எனவே இவர்களை வெறுக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்"-என்று பெரியார் விளக்கந்தந்தார். கஷ்டப்படும் மக்களின் துன்பத்தை நீக்கி, அவர்கள் அறிவு, ஆற்றல், இன்பம் ஆகியவற்றை அடைவதற்குள்ள தடைகளை உடைத்து, விடுதலையை உண்டாக்க வேண்டும் என்பது தவிரக், கடவுள், மதம், இவைகளைப் பற்றித் தமக்குச்சிறிதும் கவலையில்லை-என்றார் பெரியார். விஞ்ஞான ஆராய்ச்சி வளராத காலத்தில் அறிவுக்கு எட்டாத விஷயங்களைக் கடவுள் செயல் என்று மனிதன் நம்பினான். கடவுள் இல்லை என்று நாத்திகராகிய நாம் கூற முடிகிறதே, இது எப்படி? மதம், கடவுளுக்கும் மனி தனுக்கும் இடையில் தரகர்களை ஏற்படுத்தத்தான் உதவிற்று மனிதனுக்குத், தானே சிந்திந்துச் செயல்படும் பகுத்தறிவு மிகுதியாக இருக்கும்போது, ஏன் கடவுள்