பக்கம்:தந்தை பெரியார்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 1971-ல் எழும்பூர் தொகுதிகளின் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர். கலைஞர் ஆட்சியில் குடிசை மாற்று வர்ரியத் தலைவராக் அரும்பணி புரிந்தவர். இன்று அ. இ. அ. தி. மு. கழகத்தில் உள்ளார். திருவாரூரில் கலைஞர், தென்னன், பி. எஸ். இளங்கோ, மா. செங் குட்டுவன் ஆகியோர் இவருக்குப் பள்ளித் தோழர்கள். பெரியார்-மணியம்மை திருமணச்செய்தி வெளியானதும் அண்ணா தந்த அறிக்கையும், பின்னர் திருமணம் ஆனவுடன் தந்த அறிக்கையும் முக்கியமானவை. 3-7-49 அன்று ஒர் அறிக்கை வெளியிடப்பட்டது; பெரியார்-மணியம்மை திருமணத்தை இனித் தடுத்து நிறுத்திட முடியாது என்பது உறுதியாகிவிட்டபின்னர் சென்றஆண்டு நாம் பெரியாரின் 77-வது பிறந்தநாள் கொண்டாடினோம். இந்த ஆண்டு அவர் தமது திருமண வைபவத்தைக் காணும்படி அழைக்கிறார்; இல்லை, அறிவிக்கிறார். அய்ந்தாறு ஆண்டுகளாகப் பெரியா ருடைய உடலைக் கவனித்துக்கொள்ளும் திருத்தொண்டிலே தன்னை ஒப்படைத்துக்கொண்டிருந்த மணியம்மையாரைத் தான் பெரியார் பதிவுத் திருமணம் செய்து கொள்ளப், போகிறார்; பெரியாருக்கு வயது 72. மணியம்மையாருக்கு வயது 26. - - இதனால் நமக்குக் கோபம், கொதிப்பு ஏற்படலாம் என்று தமது 28-6-1949 விடுதலை’ அறிக்கையில் பெரி யாரே குறிப்பிடுகிறார். அவை மட்டுமா? இந்தச் சேதியாலே ஏற்பட்ட கண்ணிர் இந்தக் கண்ணிர்ை அவர் எதிர்பார்த் திருப்பாரா, அல்லது மதிப்பாரா என்பது ஒருபுறமிருக்க, எதற்கும் கலங்கா உள்ளம் படைத்த இளைஞர்கள் இந்தச் சேதிகேட்டுக் கண்ணிர் வடிப்பதுபோல் வேறு எப்போதும். நடைபெற்றதில்லை. உலகச் சம்பவங்களிலேயே இதற்கு இணையானதாக வேறு ஒன்றைக் காட்டவும் முடியாது. நாம் பெரியாரை அரசியல்கட்சித் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. குடும்பத் தலைவரென, வாழ்வுக்கு வழிகாட்டியென, மானத்தை மீட்டுத் தரும் மகான் என, அடிம்ை ஒழிக்கும் வீரரென மரியாதையுடனும் அன்புடனும்