பக்கம்:தந்தை பெரியார்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 பேணிவந்தோம். பொருந்தாத் திருமணம் நாட்டுக்கோர் சாபக்கேடு என அவர் ஆயிரமாயிரம் மேடைகளில் முழங் கினார். இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர் தமது 72.ம் வயதில் 26 வயதுள்ள பெண்ணைப் பதிவுத்திருமணம் செய்து கொள்கிறார் என்றால் கண்ணிரைக் காணிக்கையாகத் தரு வதைத் தவிர வேறென்ன நிலைமை இருக்கும்? பொருந்தாத் திருமணம்; புனிதத் தலைவரின் பொருந் தாத் திருமணம்! பல நெருக்கடிகள் ஆபத்துகள் பார்த் திருக்கிறோம். இந்தப் பேரிடியைத் தாங்கிக்கொள்ள முடிய வில்லை; எம்மை ஆளாக்கிவிட்ட தலைவரே! இந்தக் கதிக்கு எம்மை ஆளாக்கவா இவ்வளவு உழைப்பும் பயன்படவேண் டும்? நாங்கள் செய்த தவறுதான் என்ன? இந்தத் தகாத காரியத்தைத் தாங்கள் , செய்து, எங்கள் தன்மானத்தை அறுத்தெறிவது ஏன்? எப்படித் தாங்குவோம் இந்த இழிவை? எத்தனை ஆயிரம் காரணம் காட்டினாலும் இது பொருந் தாத் திருமணம் என்பதை மறைக்க முடியாதே! பெரியாரே இப்படி ஒரு பொருந்தாத் திருமணம் செய்து கொள்கிறீர்களே, இது சரியா?’ என்று கேட் கிறோம். போடா, போ! நான் திருமணம் மட்டுமா செய்து கொள்ளப் போகிறேன். இயக்கத்தையே மணி யம்மையிடம்தான் ஒப்படைக்கப் போகிறேன்' என்று கூறு கிறார் அறிக்கையில். நடைபெறப் போவது பொருந்தாத் திருமணம் மட்டுமல்ல; புதிய மகுடாபிஷேகமும். ஒரு தவறு இன்னொரு தவறுக்குக் காரணமாகக் காட்டப்படு கிறது. பொருந்தாத் திருமணத்தால் ஏற்படும் இழிவையும் பழியையும் நாம் தாங்கிக் கொள்வது மட்டுமல்ல. இந்தத் தகாத முறையினால் தலைவி ஆகப்போகும் மணியம்மையின் கீழிருந்து நாம் எதிர்காலத்தில் பணியாற்றவும் தயாராக, வேண்டும். என் ஆயுள் வரையும், கூடுமானவரை என் ஆயுளுக்குப் பின்னும், ஒழுங்காக இயக்கத்தை நடத்தும் தகுதி இந்த மணியம்மைக்கு உண்டு' என்று கூறிவிட்டாரே! ஒர் இயக்கத்துக்கு வாரிசு முறை எதற்கு? ஜனநாயக முறைக்கு ஏற்றதுதானா? நடைமுறையிலே வெற்றி தரக்