பக்கம்:தந்தை பெரியார்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கூடியதுதானா? 'இயக்கத்திலே உள்ள எவரிடமும் எனக்கு நம்பிக்கையில்லை. என் நம்பிக்கைக்கு உரியவர்களாக யாரும் தென்படவில்லை. இயக்கத்தை நடத்திச் செல்லும் தகுதியும் திறமையும் வேறு யாருக்கும் இருப்பதாக நான் எண்ணவில்லை” என்கிறார். ஏதோ கோபத்தால் பேசு கிறார் என்றெண்ணிச் சும்மா இருந்து வந்தோம். இயக்கத் திலுள்ள யாராவது துரோகி, கேடு நினைப்பவன் என்று நிரூபிக்க முடியுமானால், விரட்டி விடலாமே! நம்மை நம்பாதவரை இனி நாம் எப்படி நம்புவது? "உன்னிடம் நம்பிக்கை அற்றவரிடம் இராதே அவர் தலைமையில் பணியாற்றாதே. ஒடு ஒடு!” என்று விரட்டு கிறதே அவர் அறிக்கை பொருந்தாத் திருமணம் என்று கேள்வியுற்றதும் வெட்கப்பட்டோம்.இதற்குப் பெரியாரின் அறிக்கை, நமக்கு வேதனையும் ஊட்டுகிறது. இதோ, விரட்டப்படுகிறோம்! தந்தை மக்களை விரட்டியடிக்கிறார். வீட்டை விட்டு வெளியேறுகிறோம்!' அண்ணா என்ன எழுதினால் என்ன? எப்படிக் கண்ணிர் சிந்தினால் என்ன? தத்தம் குடும்பத்தோடு பெரியாருக்குத் தங்களை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்ட பெரு மக்கள் தமிழகத்தில் நிறையப் பேர் இருந்தனர். நிலக் கிழார்களாகவும், வணிகர்களாகவும், வசதி படைத்தவர் களாகவும் பலர் சுயமரியாதை இயக்கத்தில் பெரியாருக்காக மட்டுமே எதையும் செய்யச் சித்தமாயிருந்தனர். அப்படிப் பட்டோர் மீண்டும் பெரியார்பால் தங்கள் விசுவாசத்தைப் புதுப்பித்துக் கொண்டு, முன்பைவிட ஆழமாகப் பற்றுதல் காட்டத் தொடங்கினர். r நீடாமங்கலம் அ. ஆறுமுகம், பெண்ணாகரம் எம். என். நஞ்சையா. திருச்சி டி. டி. வீரப்பா, குடந்தை டி. மாரி முத்து, பட்டுக்கோட்டை ரத்தினசாமி சகோதரர்கள், சொரக்குடி வாசுதேவன், திருச்சி பிரான்சிஸ், சேலம் குகை கே. ஜெகதீசன், ரொ. சு. அருணாசலம், குனியமுத்துார் (கோவை). சதாசிவம், மதுரை பழனிவேலு, நெல்லை தியாகராஜன், கன்னியாகுமரி வழக்கறிஞர் கிருஷ்ணன்,