பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காலகட்டத்தில் தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்று கூறியவர் என்பதும் எண்ணத்தக்கது.

“நான் தமிழுக்குத் தொண்டு செய்வது தமிழுக்காக அல்ல; தாய்மொழியைப் பாதுகாத்தல் ஒவ்வொருவருடைய கடனுமாகும். நம் தமிழ்மொழி தாய்மொழி என்று மட்டுமல்லாமல் எல்லா வனப்புகளும் கொண்ட சிறந்த மொழி என்பதாலேயே” (ப. 131) என்ற பெரியாரின் கருத்துகளையும் “அவர் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றவர்; கட்டாய இந்தியை கல்லறைக்கு அனுப்பியவர்” போன்ற செய்திகளையும் தெளிவுபடுத்துகிறார் நூலாசிரியர். தந்தை பெரியார் தமிழை விமர்சனம் செய்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் யாரும் எண்ணிப் பார்க்காத காலகட்டத்தில் தமிழில் எழுத்துச் சீர்திருத்தத்தைத் தன்னுடைய குடியரசு இதழில் வெளியிட்டு நடைமுறைப் படுத்தியவர். இவ்வெழுத்துச் சீர்திருத்தம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.

தீண்டாமை, சாதி ஒழிப்பு, வருணாச்சிரமதர்மம் போன்றவற்றைப்பற்றிப் பெரியாரின் கருத்துகளைக் கூறும் நூலாசிரியர் மிகவும் தெளிந்த பார்வையோடு அவற்றை விளக்குகிறார். நம் நாட்டில் சாதி என்று எடுத்துக்கொண்டால் பார்ப்பான், சூத்திரன் என்கிற இரண்டுதான்: செட்டி, முதலி, பறையன், நாவிதன், வண்ணான் என்பவன் எல்லாம் அவனவன் செய்கிற தொழிலால் பிரிந்திருந்தவனே தவிர - பிரிக்கப்பெற்றவனே தவிர - மற்றபடி அவர்களுக்குள் எந்த பேதமும் இல்லை (பக். 86). “உத்தியோகத்தினால் ஒருவன் மேல்சாதியானால், கீழ்ச்சாதிக்காரனுக்கும் மேல்சாதியான் பெற்றிருக்கும் அளவுப்படியே உத்தியோகம் கொடுத்துக் கீழ்சாதித் தன்மையை ஒழி என்கிறேன். தகுதியால் ஒருவன் மேல்சாதியானால், மேல்சாதியான் பெற்றிருக்கும் தகுதிமுறையைக் கீழ்சாதியானும் பெறும் அளவுக்குத் தகுதியைக் கொடுத்து கீழ்ச்சாதித் தன்மையை ஒழி என்றுதான் நான் கூறுகிறேன்” (பக். 87) என்பன போன்ற பெரியாரின் கருத்துகளைப் பொருத்தமான முறையில் வகைப்படுத்தி விளக்கியுள்ள நூலாசிரியரின் திறமை வியந்து பாராட்டத்தக்கது.

தந்தை பெரியாரின் சிந்தனைகள் முழுவதையும் அப்படியே எழுதுவதாக இருந்தால் பல்லாயிரம் பக்கங்களாக நீளும்

X