பக்கம்:தந்தை பெரியார் சிந்தனைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சமூகம்பற்றிய சிந்தனைகள்

77



கின்றனர்;[குறிப்பு 1] அரசு அலுவல் பார்க்கின்றனர்; வாணிகம் செய்கின்றனர்; உழவுத்தொழில் செய்கின்றனர். அங்ஙனமே, வேளாளர் மறையோதுகின்றனர்; அரசு அலுவல்களில் அமர்ந்துள்ளனர்; வாணிகத்தில் ஈடுபடுகின்றனர். ஏனைய சாதியினரும் எல்லாவிதத் தொழில்களிலும் ஈடுபடுகின்றனர். எனவே, மக்கள் தொழில் செய்யும் பொழுது, செய்யும் தொழில் காரணமாக அந்தந்தச் சாதியினராகின்றனர் என்று கோடலே பொருந்தும்[குறிப்பு 2]. பண்டும் இந்த நிலையே வழக்கில் இருந்திருத்தல் வேண்டும். நான் ஆசிரியத்தொழிலிலிருப்பதால் நான் பார்ப்பனன். என் மைந்தருள் ஒருவன் வணிகம் செய்தால் அவன் வாணிகன்; இன்னொருவன் உழவுத்தொழிலில் ஈடுபட்டால் அவன் வேளாளன்[குறிப்பு 3] ஓதல், பகை, தூது என்ற பிரிவிற்கு நிமித்தம் கூறும் தொல்காப்பியம்.

அவற்றுள், ‘ஓதலும் தூதும் உயிர்ந்தோர் மேன’[குறிப்பு 4]

என்று கூறும்பொழுது ‘உயிர்ந்தோர்’ என்று பொதுப்படையாக இருப்பது சிந்திக்கத் தக்கது. பிறப்பினால் உயர்வு உண்டு என்ற கொள்கையில் அழுந்திய உரையாசிரியகள் ‘உயிர்ந்தோர்’ என்பதற்குத் தத்தமக்குத் தோன்றியவாறு பொருளுரைத்தனர். இளம்பூரணர், ‘நால்வகை வருணத்தினும் உயர்ந்த அந்தணர் அரசர்’ என்றும், நச்சினார்க்கினியர் ‘அந்தணர் முதலிய மூவர்’ என்றும் பொருளுரைத்தனர். ஒவ்வொருவரும் தத்தம் மனப்பான்மைக் கேற்றவாறு ஒவ்வோர் அளவுகோல் (Norms) கொண்டனர். இங்ஙனம் உரையாசிரியர்கள் சாதிப்பிரிவையொட்டி ‘உயர்ந்தோர்’ என்று கூறியிருப்பது இக்காலத்திற்குச் சிறிதும் ஏற்காது; எக்காலத்திற்கும் ஏற்காது; ஏற்கவும் முடியாது. எனவே, ‘உயர்ந்தோர்’ என்பதற்கு ‘அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் சீலத்தினாலும், பண்பாட்டினாலும் உயர்ந்தோர்’ என்ற கோடலே பொருந்தும்; அஃதே அறிவுடைமையுமாகும். மேற்குறிப்பிட்ட நூற்பாவினை அடுத்து வரும் நூற்பாக்களிலும்


  1. பாரதத்தில் துரோணர், கிருபர், அசுவத்தாமா போரில் ஈடுபட்டிருந்ததை ஈண்டு நினைவு கூரலாம். இவர்கள் பார்ப்பனர்.
  2. இதுதான் தந்தை பெரியாரின் வினாவாக இருந்தது. வள்ளுவர் கருத்துக்கும் ஒத்துள்ளதாக அமைகின்றது. இக்கருத்து ‘தீண்டாமை’ என்ற தலைப்பின்கீழும் வந்துள்ளது.
  3. ஆந்திரநாட்டில் இன்றும் ஆசிரியத் தொழிலிலுள்ளவரை ‘அய்யவொரு’ (அய்யா) என்று வழங்குவதை அறியலாம்.
  4. அகத்திணை-நூற்பா-28