பக்கம்:தனி வீடு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்டும் மலரும் 99

தருமபுத்திரர் யோசித்து, அப்படியால்ை நீ ஒரு முறை தூது போய்விட்டு வா. அவர்கள் பாதி நாடு தரட்டும். இல்லாவிட்டால் ஐந்து ஊர் தரட்டும். அவையும் இல்லா விட்டால் ஐந்து வீடுகள் தரட்டும். ஒன்றும் இல்லை என்று மறுத்தால் போர் செய்வோம் என்று சொல்லி விட்டு வா' என்ருர், - x -

கண்ணன் தருமபுத்திரனுடைய தம்பிகளின் கருத் தைக் கேட்கத் தொடங்கின்ை. வீமனைக் கேட்டபோது அவன் மிகவும் சினந்து, என்னைத் தூது அனுப்புங்கள். எல்லோரையும் என் கதைக்கு இரையாக்கி வருகிறேன்' என்று கோபத்தோடு சொன்னன். அருச்சுனனும் மிக்க வீறுடன் பேசினன். நகுல்னும் சினந்து அப்படியே சொன்னன். பிறகு சகாதேவனிடம் வந்து, உன் கருத்து என்ன அப்பா?' என்று கேட்டான் கண்ணன்.

சகாதேவ ன் கூ ற்று

சகாதேவன் சிறந்த ஆத்ம ஞானி. மற்றவர்கள், நம் முடைய ராஜ்யம்; அவர்களுடைய ராஜ்யம் என்று வேறு படுத்திப் பார்க்கின்ற அறிவும், அதல்ை கோபமும், பகை யும் கொண்டிருந்தார்கள். சகாதேவன் சத்தியத்தை உணர்ந்தவன்; அவன் சொன்னன், கோபாலா, இனி என்ன நடக்கும் என்பது உனக்குத் தெரியாதா? உன் எண்ணம் எதுவோ அதுதான் என்னுடைய எண்ணம்' என்று சொன்னன். இதைக் கேட்ட கண்ணன், எல்லோ ரையும் போல இவன் பேசவில்லையே! இவனிடம் ஏதோ நுட்பமான கருத்து இருக்கிறது. அதை இரகசியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று எண்ணி அவனைத் தனியே அழைத்துச் சென்ருன். - -

சென்று அவன் கருத்தைக் கேட்டபோது, கண்ணு, உன்னுடைய கருத்து எனக்குத் தெரியும். துரியோதன லுக்கு வெற்றி வருவதோ, பர்ண்டவர்களுக்கு வெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/109&oldid=575920" இலிருந்து மீள்விக்கப்பட்டது