பக்கம்:தனி வீடு.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனி வீடு '1 1

அவனுடைய சிறப்பு, குமரகுருபரன் ஆக இருப்பதில் விளங்குகிறது; அவன் தலைமை விளங்குகிறது. வள்ளி மணவாளனாக இருப்பதில் அவன் கருணே விளங்குகிற்து.

முதல் திருப்புகழ்

அருணகிரிநாதப் பெருமான் குமரகுருபரணிடத்தில் ஈடுபாடு உடையவர். அவர் பதினருயிரம் திருப்புகழ் பாடினர். முதல் முதலாக அதனைப் பாடத் தொடங்கிய போது முருகப் பெருமானுடைய திருவிளையாட்டில் பல திறங்கள் கினேவுக்கு வந்தன. அவற்றுள் முதலில் எதை வைப்பது என்று யோசித்தார். எந்தக் கோலத்தில் முருகனே முதலில் வைத்துச் சொல்வது என்ற ஆராய்ச்சி அவருக்குப் பிறந்தது. அவருடைய உள்ளத்தில் குமர குருபரகைத் தோற்றம் அளித்தான் ஆண்டவன். அழகிய பீடத்தில் அவன் அமர்ந்து இருக்கச் சிவபெருமான் அவனுக்கு முன் கின்று அவன் புகழ் பேச, உபதேசம் செய்வதாக ஒரு காட்சி அவருக்குத் தோன்றியது உடனே

பாடத் தொடங்கினர். .

முத்தைத்தரு பத்தித் திருநகை

அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபா என ஒதும்

முக்கட்பர மிர்க்குச் சுருதியின் முற்பட்டது கற்பித்து.' . . . . இந்த அலங்காரப் பாடலில் முருகனப் பற்றிச் சொல் லும்போது, அவன் சிவபெருமானுக்குக் குருவாக இருந்த வன் என்று சொல்ல வருகிருர். - -

சிவபெருமான் પક? ..

சிவபெருமான் எத்தகையவன்! யானையை உரித்துப் போர்த்தவன்; மூன்று புரங்களை எரித்தவன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/21&oldid=575832" இலிருந்து மீள்விக்கப்பட்டது