பக்கம்:தனி வீடு.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தனி வீடு

ஊன நாடகம் ஆடிக்கொண்டிருக்கும்போதே ஆண்ட வனுடைய கினேப்பைப் பெற்று, அவனுடைய அருளைப் பெற வேண்டுமென்று உருகி, அந்த உருக்கத்தின் மிகுதி யாலே அவனுடைய வடிவாகிய ஞானத்தோடு தொடர்பு பெற்று, அதனேயே பெருக்கி ஞான விளையாடல் புரியும் கிலே வந்தால், என்றும் மாருத இன்ப வாழ்வைப் பெற லாம்' என்பதை மணிவாசகர் ஒரு வகையில் சொன்னர்; அது எனக்குக் கிடைத்தது என்ருர். அருணகிரியார் வேறு. வகையில், அது கிடைக்கவேண்டும் என்று கேட்கிரு.ர்.
  • * 迷

யோன ஞான விநோதந்

தன என்று அேருள்வாய், சேயான வேல்கந்த னே..செந்தி

லாய் சித்ர மாதர் அல்குல் தோயா உருகிப் பருகிப்

பெருகித் துவளும்இந்த மாயா விநோத மைேதுக்க

மானது மாய்வதற்கே?

(குழந்தைத் திருக்கோலம் கொண்டவனகிய வேலா யுதத்தைப் பிடித்த கந்தவேளே! திருச்செந்துாரில் எழுங் தருளியிருப்பவனே! தம்மைப் பிறர் கானும் பொருட்டு அலங்காரம் பண்ணிக்கொள்ளும் ஒழுக்கம் கெட்ட மாதர் களுடைய உறுப்பில் தோய்ந்து உருகிச் சிற்றின்பத்தைப் பருகி அதல்ை மயல் பெருகிச் செயலற்று வர்ட்டம் அடை யும் இந்த மாழை விளையாட்டில்வரும் மனத்துயரம் பாயும். பொருட்டு, நீயன்றி வேறு அல்லாத் ஞான விளையாட்டை எப்போது நீ அடியேனுக்கு அருள் செய்வாய்? . . . . .

விநோதம் விளையாட்டு, சேய் குழந்தை. சித்ரம். அலங்காரம் வியப்பை ஊட்டும் என்றும் சொல்லலாம். அல்குல் - பெண் அடையாளம், துவளும் . வாடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/52&oldid=575863" இலிருந்து மீள்விக்கப்பட்டது