பக்கம்:தனி வீடு.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் - 49

சொல்வதனால் அது உண்மையா என்ற ஐயம் நமக்கு உண்டாகி விடுகிறது. எல்லோரும் ஒன்றே சொன்னல் அது நிச்சயம் என்று தெரிந்து கொள்ளலாம். ஒருவன்

ஒரு பொருளைத் திருடிக்கொண்டு ஓடுகிருன். அவனே ஆயிரம் பேர் பார்த்தார்கள். அவ்வளவு பேரும், இவன் தான் திருடின்ை' என்று ஒருவனேச் சுட்டிக் காட்டுவார். கள். அப்போது அவன் திருடியது உண்மை என்று தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லாமல் பொய்ச் சாட்சி சொல்வதாக இருந்தால் ஆயிரம் பேரும் ஆயிரம் விதமாகச் சொல்வார்கள். இந்தச் சாட்சி மாறுபாட்டி ல்ை அவர்கள் சொல்வன எல்லாம் பொய் என்று தெரிந்து கொள்ளலாம். அத்தனே பேரும் சொல்கிற சாட்சியில் எது உண்மை என்று தெரிந்து கொள்ள முடியாது, அப்படி, இறைவனுடைய திருவருளில்ை நான் பெற்ற இன்பம் இத்தகையது என்று ஒவ்வொருவரும் சொல்லும் போது இறைவனைப் பற்றி வெவ்வேறு வகையில் பேசு கிரு.ர்கள். * - . . -

ஒருவர். நான் ஜடாதரகைக் கண்டேன்; சந்திர சேகரனுகக் கண்டேன்' என்று சொல்கிருள். மற்ருெரு வர், ஆறுமுக நாதனுகக் கண்டேன்' என்று சொல் கிருர், வேறு ஒருவர், ஆனே முகம் கொண்டவகை இறை வன் எனக்குக் காட்சி அளித்தான்' என்றும், மற்ருெருவர், கையில் கோதண்டத்தை ஏந்தியவகை, சீதா லக்ஷ்மண பரத சத்துருக்னரோடு எழுந்தருளினன்' என்றும் சொல் கிருர். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தத்தமக்குத் தோற்றிய அநுபவங்களே, கண்ட காட்சிகளைச் சொல்லி இருக்கிருர்கள். இவ்வளவும் உண்மை ஆகுமா? உண்மை பல வகையாக இருக்க முடியுமா? எல்லாமே பொய்யா? அல்லது இவற்றில் ஏதேனும் ஒன்றுதான் உண்மையா? இவ்வளவு பேர் சொல்கின்ற வகையில் நாம் எந்த முறைன்iப் பின்பற்றுவது?"-இத்தகைய சந்தேகங் கள் பல எழுவது இயல்பே. . ‘. . . . . . . . . . * - -

| ge fi-4 : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/59&oldid=575870" இலிருந்து மீள்விக்கப்பட்டது