பக்கம்:தனி வீடு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 75

அன்று இது. எந்தக் காலத்திலும் மாருத இன்பத்தைத் தந்து, இனிப் பிறவி, மரணம் ஆகிய இரண்டும் வராமல்

செய்கின்ற அரு மருந்து, இனிய மருந்து இது.

தேனும் அமுதமும்

தேன் ஊற்ருகத் தோன்றிப் பின்பு கடலாக மாறி அந்தத்தேன் கடலில் அமுதம் எழுந்ததாய்ச் சொல்கிருர். இனியது என்று சொல்லவேண்டுமானல் அதனைத் தேன். என்று சொல்வது ஒரு வாய்பாடு. பாட்டு இனிமையாக இருந்தது என்பதை உணர்த்த, தேன்போல இருந்தது என்று சொல்வது வழக்கம். மருந்துக்குத் தேன் இல்லை என்று யாராவது சொன்னல் அந்தப் பாட்டைக் கொண்டு வந்து இழையுங்கள் என்ரு சொல்வது? அமுதம் என்பதும் அப்படித்தான். தேனேவிடச் சிறந்தது அமுதம். புத்திக் கமலத்தில் உருகி ஊற்ருனபோது தேகை இருந்தது. அந்த ஊற்றுக் கடலானபோது அதில் அமுது விளைந்தது.

அதுபவ கிலேயிலிருந்து இறங்கி வந்துள்ள அருணகிரி நாதர் சொல் இறந்த இன்பத்தைச் சொல்லுக்குள்ளாக்கிச் சொல்கிருர். அப்படிச் சொல்கிறவர் கேட்கிறவர்களுக்கு விளங்கும் வண்ணம் சொல்ல வேண்டும். விளக்க முடியாததை விளங்கும் வண்ணம் சொல்லவேண்டுமால்ை அதற்குச் சில உத்திகள் உண்டு. அமுதம் என்று. சொல்வது அத்தகையது; உயிருக்கு இனிமை தருகின்ற, மரணத்தை மாற்றுகின்ற பொருள் அது என்று சொல் வதற்குப் பதிலாக அது தித்திக்கின்ற அமுதம் என்று சொன்னர். தித்திப்பு என்பது நாவின் சுவை. இங்கே மனம் கடந்த நிலையில் உள்ள இன்ப நிலையைச் சொல்லும் போது அப்படிச் சொல்லலாமா என்று கேட்கக்கூடாது. அப்படிச் சொல்வதல்ை சொன்னவர் கருத்தை நாம் ஒருவாறு உணர்ந்து கொள்கிருேம். நம்முடைய மொழி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/85&oldid=575896" இலிருந்து மீள்விக்கப்பட்டது