பக்கம்:தனி வீடு.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுமுக அமுதம் 79

நல்ல செயல்களேச் செய்யத் தொடங்கிப் பின்பு மெல்ல ம்ெல்லச் செயல்களை ஒழிக்கவேண்டும். அப்போது இறை வனுடைய திருவருளால் புத்திக் கமலம் விரிந்து அங்கிருந்து இன்ப ஊற்றுப் புறப்பட்டுப் பெரும் கடலாகும். அந்தக் கடலில் ஆறுமுக அமுது தோன்றும்.

இப்போது நாம் காணும் ஆறுமுகம் புத்திக் கமலத்தில் இன்ப ஊற்றுத் தோன்றச் செய்யும். அப்போது காணும் ஆறுமுகம் பரமானந்தப் பெரும் கடலில் அமுதமாகத் தோற்றும். அதற்கு இது வாயில்.

4.

ஆறு முகம்

ஆறுமுகமும் பன்னிரண்டு தோள்களும் உடைய பெருமானேக் கோயிலில் பார்க்கிருேம். பூவாலும் அணி யாலும் அலங்காரம் செய்து நம் உள்ளம் கவரும்படி செய் கிருர்கள். அந்த அலங்காரங்கள் திருமுகங்களையும், திருத் தோள்களையும் கம்முடைய கண்ணுக்கு அழகாகக் காட்டு கின்றன. இறைவனுடைய திருவருளில் ஈடுபட்ட பெரு மக்கள் இந்த ஆறுமுகத்தைப் பற்றியும், பன்னிரண்டு திருத்தோள்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக் கிருர்கள். முருகப் பெருமான் ஆறுமுகத்தையும் பன்னி ரண்டு திருத்தோளேயும் கொண்டு செய்கின்ற பல திருவிளை யாடல்களை விரிவாகத் திருமுருகாற்றுப் படையில் நக்கீர ரும், திருவகுப்பில் அருணகிரியாரும் சொல்கிருர்கள்.

வரிசையான ஆறுமுகத்தை நாம் கண்னலே கண்டு பின்பு கருத்தாலும் காணவேண்டும். கண்ணுலே காண்ட தற்குக் கற்கோயில்கள் பயன்படுகின்றன; கருத்தாலே காண்பதற்குச் சொற்கோயில் பயன்படும். ஆறுமுக நாதனின் எல்லா அலங்காரங்களேயும் பார்த்தால்தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தனி_வீடு.pdf/89&oldid=575900" இலிருந்து மீள்விக்கப்பட்டது