உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முந்நூறு ரூபாய் 'அம்மாவுக்குக் கண்தெரியாது. அப்பா நடமாட முடியாதவர். ஒரு வருடமாகப் பக்கவாதம். அக்காள் ஒருத்தி,விதவை. ஒரு குழந்தையை விட்டுவிட்டு செத்து விட்டாள். கேட்க "குடும்பத்தைத் தாங்கும் தூண் நான். வெற்றிலை பாக்குக் கடை பொன்றில் பத்து ரூபாய் சம்பளத்தில் வேலை; அதுவும் போய்விட்டது. வேலை யிருந்தபோதே வீட்டில் இரண்டு வேளைப்பட்டினி. இப்போது வேண்டுமா? நீங்கள் ஏதாவதுவழிசெய்யுங்கள்,இல்லா விட்டால் ஒரு முழக் கயிறுதான் செலவு! என்றுகூறிக் கண்ணீர் வடித்தான் அந்த ஏழை வாலிபன். பெயர் மாத்திரம் லக்ஷ்மி நாராயணன். ஆனால் தரித்திர நாரா யணானாய்த் துடித்தான். அவன் வேலை கேட்ட இடமோ... பெரிய ஆபீஸ் அல்ல, அல்லது மில் முதலாளியிடமுமல்ல. மாதம் நூற் றைம்பது ரூபாய் வருமானமுள்ள ஒருபள்ளிக்கூட ஆசி ரியரிடம். தங்கப்பன் உயர்நிலைப்பள்ளியில்கணித ஆசிரி யர். நூற்றைம்பதைக் கொண்டு தன் பெரிய குடும்பத் தையே நடத்த கஷ்டப்படும்போது, லக்ஷ்மி நாராயண னைக் காப்பாற்ற எப்படித் துணிய முடியும். தங்கப்பன் இளகிய மனமுடையவர். சீர்திருத்தக்காரர். சீர்திருத்த உலகில் அவரது புனைப் பெயர் மார்க்ஸ். மேடையில் ஏறுகிறார் என்றாலே மக்களிடையே ஒரு புத்துணர்ச்சி ஏற்படும் அவ்வளவுசிறந்த பேச்சாளி. ஏழை, ஈவு, இரக் கம் என்றெல்லாம் பேசுகிறாரே நாமும் கொஞ்சம் கை நீட்டிப் பார்க்கலாமே என்று எத்தனையோ பேர் தங் கப்பனை யாசகம் கேட்டிருக்கிறார்கள். தன் சம்பளத்தில்