உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தப்பிவிட்டார்கள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தப்பிவிட்டார்கள் ஊரில் ஒரே ரகளை-மூலைக்கு மூலை போலீஸ் லாரிகள் பறந்து கொண்டிருந்தன. இரவின் அமைதி யைக கிழித்துக்கொண்டு சிவப்புத் தொப்பிக்காரர் களின் கூச்சல், ஊரெங்கும்-தெருவெங்கும்-வீடெங்கும் ஊடுருவிப் பாய்ந்தது. எந்த வீட்டிலும் கதவு மூடி யிருக்கவில்லை. குறட்டை சப்தம் கேட்கவுமில்லை. தாய் தகப்பன்மார்களின் பேச்சுவார்த்தைகளையும் -பரபரப் பையும் கண்டு சின்னஞ்சிறு குழந்தைகள்கூட வேடிக் கைப்பார்த்துக் கொண்டிருந்தன. ஒரு வீட்டின்வாயிற் படியில் அமர்ந்து ஒரு கிழவி பாக்கு இடித்துக் கொண் டிருப்பவள்.... தன்னையறியாது தூங்கிவிட்டாள்... பாவம் பழுத்துப்போன இமைகள். 'பூம்பூம்' என்ற காரின் சப்தம் அவளைத் திடுக்கிட வைக்கவே, பாக்கு உலக் கையைத் தடதடவென்று தரையில் இடிக்க ஆரம்பித் தாள். இதைக் 'கட கட' வென்று கைகொட்டி ரசித் தான் அவள் பேரன், காரிலிருந்து இறங்கிய போலீஸ் புலிகள் வீட்டில் புகுந்து கிழவியை ஏகம் கேட்காம லேயே சோதனை போட ஆரம்பித்தனர். பரணியைப் பார்த்தனர். அடுக்களையை ஆராய்ந்தனர். கதவிடுக் கைக் கவனித்தனர். கடைசியில் உதட்டைப் பிதுக்கிக் கொண்டு வெளியே வந்தனர். 'ஐ யோ பூச்சாண்டி என்று கிழவியின் பேரன் கீழே விழுந்ததுதான் மிச்சம். இப்படி எல்லா வீடுகளிலும் சோதனை, அந்த ஊரே அல்லோல கல்லோலப்பட்டது. காரணம்? லீலா மில் சொந்தக்காரர் ராமதுரை அன்று இரவு ஏழு மணிக்கு இறந்துவிட்டார்..... இல்லை இல்லை கொலை செய்யப்பட்டார். கொலை செய்தவன் ஒரு மில் தொழிலாளி, பெயர் விட்டல். அன்றிரவே கொலை