மருத்துவக் கலை 101 அளவறிந்து உண்பவன் நீண்ட நாள் வாழ்வான். உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுப்பொருள்களே உண்ணலாகாது. உடம்புக்கு ஏற்ற உணவாயினும் சிறிதளவு குறைவாக உண்பது நல்லது; அவனது இன்பம் நீங்காது கிற்கும்; அளவறிந்து உண்ணுதவனிடம் நோய் நீங்காது கிலேத்து நிற்கும். * 'தன் செரிமான ஆற்றலையும் ஏற்ற உணவையும் உண்ணத்தக்க காலத்தையும் ஆராயாது உண்ணும் ஒருவனிடம் நோய்கள் மிகப்பலவாக வளரும். மருத்துவன் முதலில் நோயாளியிடம் நிகழ்கின்ற நோயை அதன் குறி களால் இன்னதென்று துணியவேண்டும்; பின் அது வருவதற்கு உரிய காரணத்தை ஆராய்ந்து தெளிய வேண்டும்; பின்பு அங்நோயை நீக்கும் வழியை அறிந்து அவ்வழி பிழையாமற் செய்யவேண்டும். மருத்துவ நூலைக் கற்றவன் நோயாளியின் அளவும் (பருவம், வேதனே, வலி இவற்றின் அளவும்), கோயளவும் (சாத்தியம், அசாத்தியம், யாப்பியம், காட்பட்ட நோய் என்பனவும்), காலமும் (நோயின் தொடக்கம், நடு, ஈறு என்னும் அதன் பருவ வேறுபாடும்) ஆகிய மூன்றும் பிழையாமல் மருத்துவ நூல் நெறியாலும் உணர்வு மிகுதியாலும் ஆராய்ந்து செய்ய வேண்டும். நோயாளி, மருத்துவன், மருந்து, மருந்தைப் பிழையாமல் உட்கொள்ளல் என்ற நான்கும் பிணிக்கு மருந்தாகும். இவை வள்ளுவர் கருத்துக்கள். பல்லவர் காலத்தில் பல்லவர் காலத்தில் கல்லால மரம், கருசராங்கண்ணி முதலிய மருந்து மரங்களையும் செடிகளையும் பயிரிட அக் கால மக்கள் வரி செலுத்தினர் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. சுக்கு, மிளகு, திப்பிலி என்பவை மருந்துப் பொருள்கள். இவை மூன்றிலைாகிய கடுகம் (சேர்க்கை)
பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/116
Appearance