120 தமிழகக் கலைகள் (3) (4) புண்ணியம் பாவம்: நல்ல எண்ணம், கல்ல. சொல், நல்ல செய்கை இவற்ருல் பெறப்பட்ட புண்ணி யம், உயிர்களை மனிதராகவும், தேவராகவும் பிறக்கச் செய்யும். தீய எண்ணம், தீயசொல், தீய செயல்கள் இவற் ருல் உண்டான பாவம், உயிர்களே நரக கதியிலும் உலக கதியிலும் பிறக்கச் செய்து துன்புறுத்தும். (5) ஊற்று: கல்வினே, திவினை இரண்டும் உயிரில் சுரப்பவை. இவை எண்ணம், சொல், செயல் இவற்றின் வழியாக உயிரிடம் சேர்கின்றன. (6) செறிப்பு: இருவினேகளும் சுரக்கும் ஊற்றி னது வழியை அடைத்து விடுவது செறிப்பு எனப்படும். உயிர் ஒரு பிறப்பில் செய்த இருவினைகளே மறுபிறப்பில் துய்த்து நீக்கும்பொழுதே புதிய வினைகள் வந்து சேராத படி தடுத்தலே செறிப்பு எனப்படும். (?) இங்கனம் இருவினையின் ஊற்று மேலும் பெரு காமல் தடுத்த பின்பு, துய்த்துக் கழிக்காமல் எஞ்சி நின்ற வினேகளைத் தவம் முதலியவற்ருல் நீக்கி விடுதல் உதிர்ப்பு எனப்படும், (8) மனம், மொழி, மெய், ஐம்புலன்கள் முதலியவற் ருல் உண்டாகும் வினைகள் உயிருடன் கலப்பது கட்டு எனப்படும். - (9) ஐம்புலன்களே அவித்து வினைகளிலிருந்து நீங்கிய உயிர் கடையிலா அறிவு - காட்சி - வீரியம் - இன்பம் இவற்றை அடைந்து வீடுபேறு பெறுதல் வீடு எனப்படும். வீடு பெற்ற உயிரே கடவுள் என்பது சமண சமயக் கருத்து. மேலே கூறப்பெற்ற ஒன்பது பொருள்களின் உண்மையை அறிவது கன்ஞானம் எனப்படும்; அவற் றின் தன்மையை உணர்வது நற்காட்சி எனப்படும். இவ்
பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/134
Appearance