உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழகக் கலைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தமிழகக் கலைகள் இருக்கின்றன. தூணின் கீழ்ப்புறம் அவளது தோழி நடனம் ஆடுகின்ருள். மன்மதன் சிவல்ை எரிக்கப்பட்ட போதிலும், இரதியின் விழிகளுக்கு மட்டும் காணப்படு வான் என்று சிவன் வரம் வழங்கி இருப்பதால், இரதி என்றும் வாழ்வரசியாக இருக்கின்ருள் என்பதை உணர்த்த, அவள் கழுத்தில் தாலி தொங்கிக்கொண்டிருக்கிறது. புராணத்தில் கூறப்பட்டுள்ள இக்கதை நுட்பத்தை கினேவிற்கொண்டே இரதிக்குத் தாலியை அமைத்த சிற்பி யின் நுண்ணறிவு வியக்கத் தக்கதன்ருே? திருநெல்வேலியிலுள்ள நெல்லையப்பர் திருக்கோவில் கோபுரங்களிலுள்ள சிற்பங்களும், கண்ணேக் கவரும் பிற சிற்பங்களும், மண்டபத் துரண்களில் உள்ள சிற்பங்களும், நுழைவாயிலிலுள்ள மரச்சிற்பங்களும் இந்நாட்டுச் சிற்பக் கலைத்திறனே நன்கு விளக்கவல்லன. இவையெல்லாம் நாயக்கர் காலத்துச் சிற்பங்கள் ஆகும். திருக்குறுங்குடி கோவில் கோபுர வாயில் வெளிப்புறச் சுவர்களில் திருமாலின் பத்து அவதார நிகழ்ச்சிகள் சிற்பங் களாகக் காண்கின்றன. இவ்வாறே வாயிலின் உட்புறச் சுவர்களிலும் உயரத்தில் மிக அழகிய சிற்பங்கள் காணப் படுகின்றன. இவை மிகச் சிறந்த வேலைப்பாடு கொண் ட வை: பண்பட்ட சிற்பிகளால் செய்யப்பெற்றவை; கண்டாரை வியப்புறச் செய்பவை. இவற்றின் நுண்ணிய வேலைப்பாட்டை நேரிற் காண்போரே அறிந்து வியப்புறல் கூடும். - சரபோஜி மன்னர் சிலை தஞ்சை அரண்மனையில் சலவைக் கல்லால் ஆன சரபோஜி மன்னர் சில காணப்படுகின்றது. அரசர் உடையில் கம்பீரமாக நிற்கும் சரபோஜி மன்னர் உருவம் சலவைக்கல்லில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளது. அச் சிற்பம் மகாராட்டிரர் காலத்துச் சிற்பக் கலைத்திறனே நமக்கு விளக்கிக் காட்டுகின்றது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழகக்_கலைகள்.pdf/53&oldid=863022" இலிருந்து மீள்விக்கப்பட்டது