பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

தமிழகக் குறுநில வேந்தர்


துரத்தியடித்துத்தான் என்று தரங்கினி நூலிற் (Stein, I: 300) கூறலானறியப்படுவது. இவ்வேள் குலத்துப் பெருந்தலைவனாக நன்னனென்பான் இருந்த எழில் மலையிலுள்ள செம்புறழ் புரிசைப் பாழியை, இளம்பெருஞ்சென்னி என்னுஞ் சோழன் தன்குடிக் கடனாதலிற் சென்று பொடியாக்கினான் எனச் சான்றோர் தெளிவித்தலாலும் இவர் தொன்மைப் பகைமையறியலாம். இதனைச் சோழர் பெருமகன்,

“விளங்குபுகழ் நிறுத்த விளம் பெருஞ்சென்னி
குடிக்கடனாதலிற் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழிநூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் கொகொன்றயானை"

(அகம். 375)

என்பதனால் நன்கறிக. இதன் கண் (வேளிருடைய) பாழியழித்தல் சோழர் குடிக் கடனென்றும், அது முன்னைச் சோழர் தொடங்கி முடியாதகுறைவினை என்றும், அதனை முடித்தற்கு இவ்விளம் பெருஞ்சென்னி படையெடுத்துப் போய் அவர்க்குத் துணையாய் நின்ற வடுக வேளிரைச் சவட்டிப் பாழியை பொடி செய்தனன் என்று கூறுதல் காண்க. பாழி வேளிர்க்குரியதாதல்

அணங்குடை வரைப்பிற் பாழியாங்கண்
வேண்முதுமாக்கள் வியனகர்க் கரந்த
அருங்கல வெறுக்கை"

அகம்-372)

என வருதலானறியலாம்.

பாழி என்பது பாழிக்கொடி கட்டிய ஊர் எனக் கொள்ளலாம். பாழித்துவசம் வேள்புலச்சளுக்கர்க்குரியதென்தும் இது பல்வகைக் கொடியும் எழுதியதோர் கொடி என்பதும் சாசனவல்லாரறிந்தனர். அக்கொடியுடைமையால் எழின் மலைக் கோட்டை பாழி எனலாயிற்றென நினைக. இவ்வாறே நன்னன் வேண்மானுக்குரிய பாரம் என்னும்