பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

93


“...........................புதுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானலம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கா னெய்தல்
விழவணி மகளிர் தழையணிக் கூட்டும்
வென்வேற் கவுரியர் தொன்முது கோடி
முழங்கிரும் பௌவ மிரங்கு முன்றுறை
வெல்போ ரிராம னருமறைக் கவித்த
பல்வீ ழாலம் போல
வொலியவிந் தன்றிவ் வழுங்க லூரே”

என்பதனாற் றிருவணையாகிய சேதுமுன்றுறையைக் கவுரியராகிய பாண்டியருடையதென்று சொற்றார்.

இதன்கட் சீராமமூர்த்தியார் தாமும் பரிகாரமுமாகச் சில இரகசியம் விசாரிக்கப்புக்கபோது இக்கடற்கரையினுள்ளதோ ராலமரத்துப்பறவைகள் கூக்குரல் அதற்குத் தடையாதல்கண்டு அவை யொலியடங்கக் கையமைத்தருளினார் என்பது கேட்கப்படுகின்றது. இச்செய்தி நிகழ்ந்ததலம் இப்போது நவபாஷாணமென்று பெயர் சிறந்ததென்பதும் இக்காரணம்பற்றியே ஆங்குக் கடலும் ஒலியவிந்துளதென்பதும் நாம் பழைமையாய்க் கேட்பனவேயாம்.

தஞ்சையையாண்ட நாயகர்குலத்துத் திருமலாம்பா என்னும் பெண்மணியால் மிகவு மினியதாகச் செய்யப்பட்ட வரதாப்யுதயம் என்னும் வடமொழிக்காவியத்தில் ஸேதுபதி யரசரை,

“ரக்ஷித்வா ஸேதுநாதம்
சரணமுபகதம்
பாண்டிய ராஜா ப்தகம்தம்–”

என்பதனால் ஸேதுநாதன் என்றும் பாண்டியவரசர்க்கு நண்பர் என்றுங் கூறப்பட்டுள்ளது. பாண்டியர்க்குத்-