பக்கம்:தமிழகக் குறுநில வேந்தர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா. இராகவய்யங்கார்

97

என வருதலா னறியப்படுவது. இதன்கட் டிரு மருவிக்களிக்குஞ் செம்பி நாட்டான் எனப் பாடுதலான் இந் நாட்டின் புண்ணியவிசேடம் நன்றுணரலாகும்.

சீராமமூர்த்திக்குப் பிறந்தவுரிமையானே கிடைத்த கங்கை நாட்டினும் வெற்றியாற்படைத்த ஸேதுநாடு சிறந்தது என்று தோன்றத் திருமருவிக்களிக்குஞ் செம்பிநாடு என்றார். கங்கை நாடாட்சி எத்துணையோர்கைப் பட்டுப் பலப்பல மாறுதலடைந்து நிற்க, இச்சேது நாடாட்சி யொன்றுமட்டும் ஸ்ரீராமமூர்த்தியி னருள்பெற்ற சிலை வேடர்குல முறையினிலை பெற்று வருதலானே இப் புண்ணிய நாட்டிற்கு அத்தெய்வாநுக்கிரகம் மிகவுண்டென்பது ஊகித்தலாகும். அத்தெய்வம் வீடமைவிற்கு முடி வழங்கியநாடும் இதுவாதல் நினைக்கத்தகும்.

“தாருக்களுள் அசுவத்தமுமாவேன்” என்று கண்ணன் கீதையி ளருளிச்செய்தபடி திருப்புல்லா ணித்தலத்துத் தெய்வம் திருவரசாய் நின்று தன்னிழலிற் சேதுநாட்டரசைவைத்துக் காக்கின்ற தென்ப. திருப்புல்லாணியில் பகவான் அசுவத்தரூபியாய் நின்றளித்தலை,

“பெருவயிறு கண்டமாலை யுதரவலி யண்டவாயு
பிரமிய கிரந்திசூலை தலைநோவும்
இருமலொடு தந்தவாயு குருடுசெவிடுஞ் சொலூமை
பிவைகண்முத றொந்த்ரோக வினையாவும்
ஒருநொடியி லஞ்சியோடும் வறுமையொடு சஞ்சிதாதி
யுபரியி னடைந்த பாவமவை தாமும்
மருமலர் பிறந்த கோதை மருவி மகி ழும்புலானி

வளரரசு கண்டபேரை யணுகாவே”[1]

என்னும் பழையபாடலா னுணர்ந்துகொள்க.


  1. சேதுபதிகள் என்னும் கட்டுரை இந்நூலுள் 5 ஆம்
    அத்தியாயமாக அடுத்து வருகின்றது.