பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

உயரம் 180 அடி. கூனூர், உதகமண்டல வாசிகள் இவ்விடத்திற்கு அடிக்கடி இன்பச் செலவை மேற்கொள்ளுகின்றனர்.

குலக்கம்பை மலைக்கு அருகிலுள்ள இடத்தில் பாய்ந்து வரும் குலக்கம்பை ஆறு ஒரு நீர்விழ்ச்சியை உண்டாக்குகிறது. இவ்வாறு மிகவும் சிறியது. ஆனால் இதனால் உண்டாக்கப்படும் நீர் வீழ்ச்சியோ, நீலகிரி மலையிலேயே உயரமானது. சுமார் 400 அடி உயரத்திலிருந்து இது வீழ்கிறது. குலக்கம்பை ஆற்றுக்கு மேற்கில் குந்தா ஆறு குறுகிய படுக்கை வழியாக ஓடி வருகிறது. இவ்வாறு குந்தா மலையை, நீலகிரிப் பீடபூமியிலிருந்து தனியாகப் பிரிக்கிறது. உதகமண்டலத்திற்குத் தென்மேற்கிலுள்ள நஞ்ச நாடு பள்ளத்தாக்கு, எமரால்டு பள்ளத்தாக்கு ஆகியவற்றில் ஓடி வரும் சிற்றருவிகளையும் ஒன்று சேர்த்துக்கொண்டு குந்தா மலையிலிருந்து ஓடி வருகிறது. இவ்வாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருக்கும் நீர் மின்சாரத் திட்டம் மிகவும் பெரியது. இதில் உண்டாகும் மின்னாற்றல் பல தொழிற்சாலைகளை ஓட்டுவதற்கும் விளக்கெரிக்கவும் பயன்படுகிறது.

நீலகிரியின் தென்மேற்கு மூலையிலிருந்து 'பில்லி தாதா கல்லா' என்ற அழகிய சிற்றாறு ஓடி வருகிறது. இது அவலஞ்சி மலையின் மேற்குச் சரிவில் பாய்கிறது. பவானி யாற்றின் முக்கியத் துணையாறுகளில் இதுவும் ஒன்று.

நீலகிரியின் மேற்குக் கோடியிலிருந்து எல்லாவற்றினும் பெரிய ஆறாகிய பைக்காரா தோன்றுகிறது. மூக்கறுத்தி மலையின் சரிவில் இவ்வாறு தோன்றி, கிழக்கிலுள்ள கிரூர் மண்டு, பார்சன் ஆகிய பள்ளத்தாக்குகளிலிருந்து ஓடி வரும் அருவிகளின் நீரை பெற்றுக் கொண்டு, பைக்காரா தங்கல் மனைக்கு எதிரே ஓடி வருகிறது. பிறகு குறுகிய ஒரு பள்ளத்தாக்கில்