பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

267

அரசி' என்று குறிப்பிடும்போது, கோடைக்கானலைக் 'குறிஞ்சி இளவரசி' என்றுதான் குறிப்பிட வேண்டும். இங்கு இளவரசர் என்று குறிப்பிடப்படுபவர் காலஞ் சென்ற புதுக்கோட்டை மன்னரே. கி. பி. 1890-ஆம் ஆண்டு அவரும் அவருடைய இளவலாகிய துரைராஜாவும், அவர்களுடைய பொறுப்பாளரும், ஆசிரியருமான திருவாளர் எஃப். எஃப். கிராஸ்லீயும் கோடைக்கானலில் வசிப்பதற்காக வந்தனர். 'சென்ட்ரல் ஹவுஸ்' என்ற இடத்தில் வாழ்ந்தனர். பிறகு 'வுட்வில்லி' என்ற மாளிகையில் குடியேறினர். கடைசியாக, கொலோனல் ஜே. பென்னிகுவிக் என்பாரிடத்திலிருந்து 'ட்ரெடிஸ்' என்ற தோட்ட மாளிகையை வாங்கினர். இம் மாளிகை சென்னையில் சிறந்த வழக்கறிஞராயிருந்தவரும், கோடைக்கானலில் முதன் முதலில் குடியேறிய இந்தியருமான திருவாளர் முத்துகிருஷ்ணன் என்பவரால் கட்டப்பட்டது. 'நட்ஷெல்' என்ற இடமும் திருவாளர் ஈ. எஃப். பினர் என்பவரிடமிருந்து வாங்கப்பட்டது.

கி. பி. 1894-ஆம் ஆண்டிலிருந்து, இளவரசர் 'ட்ரெடிஸ்' மாளிகையில் அடிக்கடி விருந்துகள் நடத்தத் தொடங்கினார். உடனே கோடைக்கானல் குமரி விழித்தெழுந்து நகை முகம் காட்டி நடனமாட ஆரம்பித்து விட்டாள். 'ட்ரெடிஸ்' மாளிகையில் இரண்டு மட்டைப் பந்தாட்ட மைதானங்கள் அமைந்திருந்தன. விருந்தின் போது எல்லோரும் அழைக்கப் பட்டனர். இன்னிசை முழக்கோடு விருந்து ஆரம்பமாகும். விளையாடுமிடத்தை மிக அழகோடு ஒப்பனை செய்து, அடிக்கடி போட்டிகளும் நடத்துவர். கி. பி. 1895ஆம் ஆண்டு 'டிரெடிஸ்' மாளிகையில் 'அகில உலக மட்டைப் பந்தாட்டப் போட்டிகள், {International Tennis matches) நடைபெற்றன. அப்போது ஆங்கிலப் பேரரசின் சார்பில் இளவரசரும், இளவல் துரை ராஜாவும், திருவாளர்கள் பீர்ஸ், மெக்கன்சி என்ற ஆங்கிலேயர்களும் கலந்துகொண்டனர். அமெரிக்கா