பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

ஊரும் பேரும்


ஊர் வணிகரும் அளித்த நிவந்தங்கள் சாசனத்தால் அறியப்படுகின்றன.இன்னும் அவ்வூரில் நகரஜினாலயம் என்று பெயர் பெற்ற சமணக் கோயிலும் இருந்தது. சந்திர பிரப தீர்த்தங்கரர் அவ்வாலயத்தில் எழுந்தருளி யிருந்ததாகச் சாசனம் கூறும். எனவே, முடிகொண்ட சோழபுரம் சைவம், வைணவம், சமணம் என்னும் மும்மதங்களும் சிறந்து விளங்கிய நகரமாகத் தோன்றுகின்றது.

கங்கைகொண்ட சோழன்

இராஜேந்திரன் தாங்கி நின்ற விருதுப் பெயர்களுள் நாடறிந்தது கங்கைகொண்டான் என்பதாகும். அப்பெயரால் சோழன் எழுந்த கங்கை கொண்டான் என்னும் ஊர்கள் தமிழ்நாட்டிற் பல பாகங்களில் உண்டு.

கடாரம் கொண்டான்

கடாரங்கொண்டான் என்ற விருதுப் பெயரும் தாங்கி நின்றான் இராஜேந்திரன், கப்பற்படை கொண்டு கழகம் என்னும் கடார நாட்டை இம்மன்னன் வென்று,இவ்விருதுப் பெயர் பூண்டான்.தஞ்சை மாவட்டம் மாயவரம் வட்டத்தில் கடாரம் கொண்டான் என்பது ஓர் ஊர்ப் பெயராக வழங்குகின்றது.தொண்டை நாட்டு மணவிற் கோட்டத்தில் கடாரங் கொண்ட சோழபுரம் இருந்ததென்று சாசனம் கூறும்.

குலோத்துங்க சோழன்

இராஜேந்திர சோழனுக்குப் பின் அரசாண்ட மன்னரில் பெருமை சான்றவன் முதற் குலோத்துங்க சோழன். கலிங்கத்துப் பரணியிற். பாராட்டப்படுகின்ற சிறந்த அரசன் இவனே. கருணாகரத் தொண்டைமான்