பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

175


“கண்ணினால் உமைக்காணக் கதவினைத் திண்ணமாகத் திறந்தருள் செய்ம்மினே”

என்று திருநாவுக்கரசர் பாடிய நிலையில் கதவு திறந்தமையால், இருவரும் மறைக்காட்டு இறைவனைக் கண்டு பாமாலை பாடிப் போற்றினர் என்றும், மீண்டும் திருக்காப்புச் செய்வதற்குத் திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடினார் என்றும் திருத்தொண்டர் புராணம் கூறும்.

15.இவ்வூர் தலைச் செங்காடு எனவும் வழங்கும். தஞ்சை நாட்டு, மாயவர வட்டத்தில் உள்ள தலையுடையவர் கோயிற் பத்து என்ற ஊரே பழைய தலைச்சங்காடென்பது சாசனத்தால் விளங்கும்.-M.E.R.,1925, 37.

16.“தடங்கடலைத் தலையாலங் காடன் தன்னை
சாராதே சாலநாள் போக்கினேனே”

என்பது அவர் பாட்டு - தலையாலங்காட்டுத் திருத்தாண்டகம், 6.

17.“விண்புகார் எனவேண்டா வெண்மாட நெடுவீதித்
தண்புகார்ச் சாய்க்காட்டெம் தலைவன்தாள் சார்ந்தாரே”
“மொட்டலர்ந்த தடந்தாழை முருகுயிர்க்கும் காவிரிப்பூம்
பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே."

-திருச்சாய்க்காட்டுப் பதிகம், 1,4,.

18.சாயாவனம் பூம்புகார் நகரைச் சேர்ந்த தென்று சாசனமும் கூறும். 269 of 1911.

19.தஞ்சை நாட்டுத் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் உள்ளது. M.E.R., 1935-36.

20."பழையனுர் ஆலங்காட்டெம் அடிகளே" -திருஞானசம்பந்தர் தேவாரம்,

இப்பொழுது காணப்படுவதுபோலவே முன்னாளிலும் பழையனூரும் ஆலங்காடும் தனித்தனித் தலங்களாக விளங்கின போலும். அதனாலேயே சுந்தரர், “பழையனுர் மேய அத்தன்