பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

231


பெருந்திருக்கோயில்

வட ஆர்க்காட்டு வந்தவாசி வட்டத்தில் மருதநாடு என்ற பழமையான ஊரொன்று உள்ளது. அங்கமைந்த ஆலயத்தின் பெயர் பெருந்திருக் கோயில் என்பது சாசனத்தால் விளங்கு கின்றது. இராஜராஜன் முதலாய பெருஞ் சோழர் காலத்துக் கல்வெட்டுக்கள் அங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. சில காலம் விக்கிரம சோழ நல்லூர் என்ற மறுபெயரும் அதற்கு வழங்கியதாகத் தெரிகின்றது. பெருந்திருக்கோயில் என்பது இக்காலத்தில் புரந்தீஸ்வரர் கோயில் எனத் திரிந்து வழங்கு கின்றது.5

சிறுதிருக்கோயில்

தென்னார்க்காட்டுச் சிதம்பர வட்டத்தில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள எழும்பூர் என்னும் உருமூர் ஒரு பழமையான ஊர்.இடைக்காலத்தில் விக்கிரம சோழ சதுர் சிறுதிருக்கோயில் வேதிமங்கலம் எனவும் அவ்வூர் வழங்கிற்று. அங்குள்ள கோயிலிற் கண்ட சாசனங்கள் சிறு திருக் கோயில் என்று அதனைக் குறிக்கின்றன. இப்பொழுது கடம்பவனேஸ்வரர் கோயில் என்று கூறப்படுவது அதுவே.

சுரக்கோயில்

பாடல் பெற்ற கடம்பூரில் அமைந்துள்ள கோயில் கரக் கோயிலாகும்.

“நன்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
கரக்கோயில் தன் கடம்பைத் திருக்கரக்கோயிலான்”

என்று தேவாரம் இக்கோயிலைப் போற்றுகின்றது.

ஞாழங்கோயில்

நறுஞ் சோலைகளின் நடுவே யமைந்தது ஞாழற் கோயில் என்று தேவாரம் பாடிற்று.தஞ்சை நாட்டில் விளநகர் என வழங்கும் விளைநகரில் அமைந்த