பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவும் தலமும்

361


திரக்கோல்

வந்தவாசிக்கு எட்டு மைல் தூரத்தில் திரக்கோல் என்னும் ஊர் உள்ளது. அங்குள்ள குன்றின் மீது மூன்று குகைகளும், மூன்று ஜினாலயங்களும் காணப்படுகின்றன. அக்கோயில்களின் அடியாகத் திருக்கோயில் என்னும் பெயர் அவ்விடத்திற்கு அமைந்த தென்றும், அதுவே திரக்கோல் ஆயிற்றென்றும் தெரிகின்றன.10

திருநாதர் குன்றம்

வட ஆர்க்காட்டுச் செஞ்சி மலையில் திருநாதர் குன்றம் என்னும் பெயருடைய பெரும் பாறை யொன்று உண்டு.அங்கு இருபத்து நான்கு ஜைன வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இன்றும் அக் குன்றில் திருநாதர் வழிபாடு நடைபெறுகின்றது. அவரைப் போற்றிப் பாடிய பதிகமும் உண்டு.11

திருப்பருத்திக் குன்றம்

தொண்டை நாட்டில் வேகவதியாற்றின் கரையிலுள்ள திருப்பருத்திக் குன்றம் முன்னாளில் காஞ்சிமாநகரின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது. செம்பொற் குன்று என்ற பெயரும் அக்குன்றுக்கு உண்டு என்பது அங்குள்ள கல்வெட்டுக்களால் அறியப்படுவதாகும். சாசனங்களில் ஜின காஞ்சி (சமண காஞ்சி) யென்று அப்பகுதி குறிக்கப் படுகின்றது. பொற்குன்றம் என்ற பெயரே பருத்திக் குன்றம் என மருவிற் றென்று கூறுவர் சிலர். அருணகிரி யென்னும் வடமொழிப் பெயரும் அதற்கு வழங்கியதாகத் தெரிகின்றது. அருணன் என்பதும், பரிதி யென்பதும் சூரியனைக் குறிக்கும் சொற்களாதலால்