பக்கம்:தமிழகம் ஊரும் பேரும்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

368

ஊரும் பேரும்


முன்னாளில் சோழ மண்டலக் கரையில் சிறந்ததொரு துறைமுக நகரமாக விளங்கிய நாகப்பட்டினத்தில் பெளத்த மதத்தைச் சார்ந்தோர் பலர் இருந்தனர். அவர் பொருட்டுத் கடாரத் தரசனாகிய ரீமாரன் என்பவன் புத்தவிகாரம் ஒன்று கட்ட விரும்பினான்.22 அப்போது சோழ நாட்டில் அரசு வீற்றிருந்தவன் இராஜராஜன் என்னும் பெருவேந்தன், அவன் சைவப் பற்றுடையவனாயினும் புறச் சமயங்களையும் ஆதரிக்கும் பெருமை வாய்ந்தவன். ஆதலால், நாகையில் புத்த விகாரம் கட்டிக் கொள்ள அவன் ஆணை தந்தான். கடாரத்தரசன் மன மகிழ்ந்து சூடாமணி வர்மன் என்னும் தன் தந்தையின் பெயரால் ஒரு பத்ம விகாரம் கட்டத் தொடங்கினான். இராஜராஜன், ஆனைமங்கலம் என்னும் ஊரை அதற்குப் பள்ளிச் சந்தமாக அளித்தான். ஆயினும், பத்ம விகாரத் திருப்பணி முற்றுப் பெறு முன்னே சோழமன்னன் காலம் சென்றான். அவன் மைந்தனாகிய இராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது படையெடுத்து, வென்று, மீண்ட பின்னர்த் தன் தந்தையார் சூடாமணி பத்ம விகாரத்திற்குக் கொடுத்த நன்கொடையைச் சாசன வாயிலாக உறுதிப்படுத்தினான்.23

இராஜேந்திர சோழன் மகனான வீர ராஜேந்திரன் புத்த மித்திரன் என்பவரை ஆதரித்தான். இவர் பொன் பற்றி என்னும் ஊரினர்; புலமை வாய்ந்தவர்; வீர சோழியம் என்னும் தமிழிலக்கணம் இயற்றியவர். இவர் புத்த மதத்தைச் சார்ந்தவர் என்பது வெளிப்படை. மிழலைக் கூற்றத்திலுள்ள பொன்பற்றி மன்னன் என்று இவர் குறிக்கப்படுதலால் வீரசோழன் காலத்தில் ஒரு குறுநில