பக்கம்:தமிழக ஆட்சி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

தமிழக ஆட்சி



இருந்தனர் என்று நேரில் கண்ட அயல் நாட்டார் (செளஜூ-குவா எனற சீனர்) குறிப்பிட்டுள்ளார்.”

அரசன் மனைவியர்

பண்டை இந்திய அரசர் ஒவ்வொருவருக்கும் மனைவியர் பலர் இருந்தனர். சிலருக்கு நூற்றுக்கணக்கான மனைவி யரும் இருந்தனர். சங்ககால அரசருக்கு எத்துனே மனேவியர் இருந்தனர் என்பது திட்டமாகக் கூற இயலாது. பூத பாண்டியனுக்கு மனைவி கோப்பெருந்தேவி, பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு மனைவி கோப்பெருந்தேவி, சேரன் சேங்குட்டுவனுக்கு மனைவி இளங்கோவேண்மாள் என்று இருந்தனர். ஆயின், வெளிமான் போன்ற சிற்றரசர்க்கு மனேவியர் சிலர் இருந்தனர் என்பது புறநானூற்றால் அறியப்படுகின்றது. பேகனுக்குக் கண்ணகி என்ற அம்மை இருந்தாள் : தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனுக்குக் கோப்பெருந்தேவி இருந்தாள். ‘பகைவரை யான் வெல்லேனயின், யான் எனது மனைவிவியை விட்டுப் பிரிந்தவளுவேன், ‘ என்று பூதபாண்டியன் சூள் உரைத்ததை நோக்க, அவனைப் போன்றவர் ஒரு மனேவியோடு வாழ்ந்தனர் என்பதை அறியலாம். பலதாரம் அக்காலத்தில் தடையில்லையாயினும், த லங் கி ள் வி, பூதபாண்டியன், செங்குட்டுவன், பேகன் போன்ற அரசர் பலர் ஒரு மனைவி யரோடு வாழ்ந்தனர் என்று கருதுதல் பொருத்தமாகும்.

பல்லவ மன்னர் மனைவியர் சிலரோடு வாழ்ந்தனர் என்பதை, அவர்தம் உருவச் சிற்பங்களும் கல்வெட்டுக்களும் உணர்த்துகின்றன. பிற்காலச் சோழர் மனைவியர் பலரைப்

1. Chau—Ju–Kua, p. 95. 2. அவர்ப்புறங் காணேன் ஆயின், சிறந்த

பேரமர் உண்கண் இவளினும் பிரிக.’

-புறநானூறு, செ. 71.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/45&oldid=573563" இலிருந்து மீள்விக்கப்பட்டது