உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக ஆட்சி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சட்டம்-முறை-காவல்

சட்டங்கள்

ஒரு நாட்டை ஆளும் அரசாங்கம் தனது ஆட்சிக் குட்பட்ட சமுதாயத்தின் நல்வாழ்வுக்காக இயற்றும் சட்டங்களின் தொகுப்பே சட்டம் என்று சொல்லப்படும். பழங்காலச் சட்டங்கள் பெரும்பாலும் சமயத்தையும் நீதி - களையும் அடிப்படையாகக் கொண்டே இயற்றப்பட்டன. ஒவ்வொரு வகுப்பாரும் இன்ன இன்னவாறு நடந்து கொள்ளவேண்டும் என்ற விதிகள் அமைக்கப்பட்டன. மனிதன் தனிப்பட்ட முறையிலும் சமுதாய முறையிலும் இவ்வுலகில் நல்வாழ்வு வாழ்ந்து மறுவுலகில் நலம்பெற வேண்டும் என்ற கருத்துக் கொண்டே, பழங்காலச் ச ட் - ங் க ள் அமைக்கப்பட்டன என்பது அறிஞர் கருத்து.’

அரசாங்க தண்டனை என்பது குடிமக்களைத் தீநெறியி னின்றும் நல்வழிப் படுத்துவதாகும். ஆதலால், தண்டனையை அறம் என்றும் அறிஞர் கூறுவர். அரசாங்கம் விதிக்கும் சட்டதிட்டங்களை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்பது இக்காலத்தைப் போலவே பழங்காலத்திலும் நன்கு வற்புறுத்தப்பட்டது. அரசன் சமுதாயப் பாதுகாப்பைக் கவனிக்க வேண்டும். அதற்கு அவன் அறத்தை அடிப் படையாகக் கொள்ள வேண்டும்; நீதியை அனைவர்க்கும் வழங்க வேண்டும்.

1. S. I. Polity, p. 197.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_ஆட்சி.pdf/83&oldid=573601" இலிருந்து மீள்விக்கப்பட்டது