உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் செ. இராசு

139

69-B. ஈரோட்டில் 'கோஷா' ஆஸ்பத்திரி

ஈரோட்டில் 1897 முதல் கிறித்தவப் பணியாற்றிய அந்தோணி வாட்சன் பிரப் 1909ல் தன் பங்களாவின் ஒரு பகுதியிலே சிறு மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். டாக்டர் மைகன் ரீஸ் என்பவர் நியமிக்கப்பட்டார். மருத்துவமனை தொடங்க 1912ல் ‘பனங்காடு' என்ற பகுதியை வாங்கினார். மருத்துவமனை கட்டினார்.

1914-15 ஆம் ஆண்டுகளில் மலேரியா, இன்புளூயன்சா, காய்ச்சல் ஈரோட்டில் அதிகமாகப் பரவியது. மருத்துவமனைப் பணி நடக்கும்போதே பாயில் படுக்க வைத்து நோயாளிகளைக் கவனித்தார். பெரும்பாலும் ஆண் மருத்துவர்களே இருந்த காரணத்தால் நோயினால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்கள் பலர் மருத்துவ வசதியின்றி இறந்தனர்.

பிரப் வேலூரிலிருந்து பெண் டாக்டர் ஹில்டா போலார்டு என்பவரை அழைத்துக் கொண்டு வந்து இஸ்லாமியப் பெண்களுக்கு மருத்துவம் செய்தார். இதனால் தான் கட்டிய மருத்துவமனைக்கு "கோஷா" ஆஸ்பத்திரி என்று பெயரிட்டார். பெண்களுக்கு மட்டுமே தொடங்கப்பட்ட அம்மருத்துவமனை ஆண்களுக்கு சிகிச்சை அளித்தபோதும் 1961வரை “கோஷா ஆஸ்பத்திரி” என்ற பெயரிலேயே இருந்துவந்தது. பின்னர் சி.எஸ்.ஐ. மருத்துவமனை என்று பெயர் மாற்றப்பட்டாலும் இன்னும் அந்த ஆஸ்பத்திரியை கோஷா ஆஸ்பத்திரி என்றே மக்கள் அழைத்து வருகின்றனர்.