உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

82. நாகூரில் கோபுரம் கட்டிய தாவூதுகான்

டெல்லிக்கு அருகில் உள்ள ஷாஜகான்பூரில் குடியிருந்த இஸ்மாயில்கான் மகன் தாவூதுகான் சையது அப்துல் காதிர் நாகூர் மானிக்பூரி அவர்களுக்காக உயர்ந்த இரு கோபுரங்கள் அமைத்த செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. தாவூதுகான் முகம்மது பந்தரில் குடியேறிய செய்தியும் கூறப்பட்டுள்ளது. அப்துல்லா என்பவரால் இக்கல்வெட்டு எழுதப்பட்டது. கோபுரத்தின் வடபுறப் பகுதியில் இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. கி.பி. 19 ஆம் நூற்றாண்டு.

(முஹம்மது பந்தர் என்பது பரங்கிப்பேட்டை)

  • Annual Report on Epigraphy (B) 292·of 1964 Annual Report on Epigraphy (D) 162 of 1964