உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

83. அத்தர் வியாபாரிகள் கட்டிய பள்ளிவாசல்*

கோவை மாநகர் பெரியகடை வீதியில் “அத்தர் ஜமாத் பள்ளிவாசல்' உள்ளது. அத்தர் போன்ற பல வாசனைப் பொருள்களை விற்கும் இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து ஹிஜ்ரி 1322ஆம் ஆண்டு (1904-1905) அதைக் கட்டி முடித்ததாக அங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.

  • Annual Report on Epigraphy (C) 55 of 1993