உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக இசுலாமிய வரலாற்று ஆவணங்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தமிழக இஸ்லாமிய வரலாற்று ஆவணங்கள்

85. திருவரம்பூர் பள்ளிவாசல் ஓலைச்சுவடி

21.10.1880 அன்று எழுதப்பட்ட ஓலை ஆவணம். ஐந்து ரூபாய் மதிப்புடைய முத்திரை ஓலையில் எழுதியுள்ளது.

திருவறம்பூர் கிராமம் வருஷை ராவுத்தர் மகன் பாவா நத்தரு ராவுத்தர் தனக்குச் சொந்தமான 500 ரூபாய் பெறுமானமுள்ள இரண்டு இடங்களில் உள்ள மூன்று ஏக்கர் 76 சென்டு நிலத்தில் கலத்து ஊழியத்துக்கு சேகுமுத்த லெப்பைக்கு அளிக்கப்பட்ட 30 சென்டு போக மீதி 3 ஏக்கர் 46 சென்டு நன்செய் நிலத்தைத் திருவறம்பூர் மஜீத் பள்ளிவாசலுக்கு கொடையாக அளித்தார்.

அதன் வருவாயைக் கொண்டு மஜீத் பள்ளி வாசலில் நாள்தோறும் விளக்கு வைக்க வேண்டும் என்றும், குதுபா ரம்ஜான் நோன்பு முப்பது நாட்கள் செலவிட வேண்டும் என்றும் எழுதியுள்ளார். மீதிப் பணம் இருந்தால் மஜீத் பள்ளிவாசலின் மராமத்துச் செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தன் விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்தக் கொடைக்கு இசுலாமியர் பலர் சாட்சிக் கையொப்பமிட்டுள்ளனர். குருசாமி அய்யர், வெங்கடாசலமய்யர், அருணாசலம்பிள்ளை மகன் வைத்தியலிங்கம் பிள்ளை, ராம பிள்ளை மகன் அருணாசலம்பிள்ளை, முத்துக் கருப்பு கண்டியன் மகன் ஆறுமுக கண்டியன் ஆகியோரும் சாட்சிக் கையொப்ப மிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மைதீன்சா என்பவர் ‘நாட்டாமை'யாக இருந்துள்ளார். இந்த ஓலையில் எழுதியவர் சய்யது அசன் என்பவர்.

ஓலைச் சுவடி

1. 1880 வருடம் அக்டோபர் மாதம் 21 தேதி திருச்சிறாப்பள்ளி தாலுக்கா திருவறம்பூர் கிறாமத்தி

2. லிருக்கும் வருஷை றாவுத்தன் குமாறன் துலுக்க ஜாதி அனுபி மதம்

விவசாயம்

3. அந்தஸ்துள்ள பாவா நத்தரு றாவுத்தராகிய நான் சரீர சுகத்துடனும் ஒருவருடைய

4.

5.

+ ம் ம்

6.

கட்டாயமன்னிலும் அடியில்க் கண்ட மஜீது பள்ளிவாசலுக்கு யெழுதி வைத்த தான சாசனம், யென்னவென்றால் யெனக்கு சொந்தமான திருச்சி றாப்பள்ளி டிஸ்திரிக்கட்டு திருச்சிறாப்பள்ளி தாலுக்கா மேல்படி

டிஸ்திரிக்கட்டுது